ஒன்றிய அமைச்சரை கைது செய்தது உத்தவ் தாக்கரே அரசு – மகாராஷ்டிராவில் பரபரப்பு!

Share this News:

மும்பை (24 ஆக 2021): ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானேவை கைது செய்து மகாராஷ்டிரா அரசு பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.

மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் நடைபெறும் ஆசிர்வாத் யாத்திரையில் கலந்துகொண்டு பேசிய மத்திய அமைச்சர் நாராயண் ரானே, சுதந்திர தின விழா உரையின்போது மஹாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரே இந்தியா சுதந்திரம் அடைந்த வருடத்தை மறந்துவிட்டதாகவும், தான் அப்போது அங்கிருந்திருந்தால் உத்தவ் தாக்கரேவை அறைந்திருப்பேன் என தெரிவித்தார்.

இதற்கு சிவசேனா கொந்தளித்தது. மேலும் சிவசேனா உறுப்பினர்கள் அளித்த புகாரின்பேரில் மத்திய அமைச்சர் நாராயண் ரானே மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், தற்போது நாராயண் ரானே மஹாராஷ்ட்ரா காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக தன் மீது பதியப்பட்ட வழக்குகளை இரத்து செய்யுமாறு மத்திய அமைச்சர் நாராயண் ரானே, மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply