மதுபானம் வீட்டுக்கே சென்று டெலிவரி – சட்டம் அமல்!

Share this News:

சண்டீகர் (07 மே 2020): பஞ்சாப் மாநிலத்தில் வீடுகளுக்‍கே சென்று மதுபானம் வழங்கும் திட்டம் அமலுக்‍கு வந்தது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மது கடைகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை மது விற்பனை செய்யப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

அதேநேரம் எந்தெந்த பகுதிகளில் எந்த நேரத்தில் மது விநியோகம் செய்யலாம் என்பது குறித்து அப்பகுதி கலால் துறை ஆணையர்கள் முடிவு செய்வார்கள் என்று கூறியுள்ளது. நபர் ஒருவருக்‍கு அதிகபட்சம் நாள் ஒன்றுக்‍கு 2 லிட்டர் வரை மது விநியோகிக்‍கப்படும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் வீடுகளுக்‍கே சென்று மதுபானம் வழங்கும் திட்டம் இன்று அமலுக்‍கு வந்தது. ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்பவர்களுக்‍கு காலை 9 மணி முதல் இரவு 7 மணிவரை மது விநியோகம் செய்யப்படும் என்றும், மது விநியோகிப்பவர்களுக்‍கு பிரத்யேக அடையாள அட்டை வழங்கப்ட்டுள்ளதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.


Share this News: