ஆரோக்கிய சேது ஆப்பை கட்டாயப்படுத்துவது சட்டவிரோதம் – நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா!

புதுடெல்லி (12 மே 2020): ஆரோக்கிய சேது ஆப்பை கட்டாயப்படுத்துவது சட்ட விரோதம் என்று நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தெரிவித்துள்ளார். கொரோனா அறிகுறி குறித்தும், அதன் பரவல் குறித்தும் அறிய ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. நோய் தாக்குதலுக்கு ஆளான நபரின் அருகில் சென்றால் நம்மை எச்சரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி, 5 கோடிக்கும் அதிகமானோரால் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ரயில், விமானப் பயணிகள்…

மேலும்...

வளைகுடாவில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களுக்கு இலவச விமான டிக்கெட் வழங்கும் பிரபல நடிகர்!

திருவனந்தபுரம் (12 மே 2020): வளைகுடாவில் ஊருக்கு திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்த தொழிலாளிகளுக்கு நடிகர் மம்மூட்டி தலைமையில் இலவச விமான டிக்கெட் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தின் பிரபல டிவி சேனலான கைரேலி, இந்த திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி வளைகுடாவில் வேலையின்றி, பணமின்றி சிக்கித் தவிக்கும் கேரள ஏழை மக்களுக்கு இலவச விமான டிக்கெட் வழங்க கைரேலி சேனல் முன் வந்துள்ளது. பிரபல நடிகர் மம்மூட்டி தலைமையில் இத்திட்டம் நிறைவேற்றப் படவுள்ளது….

மேலும்...

வியாபாரிகள் ஹேப்பி – பீதியில் பொது மக்கள்!

திருநெல்வேலி (11 மே 2020): 47 நாட்களுக்குப் பின் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் பொதுமக்கள்தான் பீதியில் உள்ளனர். கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு இன்று முதல் 34 தொழில்சார்ந்த கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் நெல்லை மாவட்டத்தில் அதிகாலையிலேயே டீ கடைகள் திறக்கப்பட்டன. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இவற்றில் முதல் நாளில் சுமார் 65 விழுக்காடு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதுபோன்று நெல்லையில் அனைத்து நகைக் கடைகளும்…

மேலும்...

கொரோனாவால் அலறும் மும்பை – 13,564 பேர் பாதிப்பு 508 பேர் பலி!

மும்பை (11 மே 2020): மும்பையில் மட்டும் கொரோனாவால் 13 ஆயிரத்து 564 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 508 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்‍கப்பட்ட மாநிலங்களில் மஹாராஷ்ட்ரா முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் 22 ஆயிரத்து 171 பேருக்‍கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தலைநகர் மும்பையில் மட்டும் வைரஸ் தொற்றால் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 13 ஆயிரத்து 564-ஆக உள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 508-ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே மும்பை ஆர்தர் சாலை சிறையில், காவலர்கள்,…

மேலும்...

டெல்லியை மிஞ்சிய தமிழகம் – கொரோனா பாதிப்பில் மூன்றாமிடம்!

சென்னை (11 மே 2020): கொரோனா பாதிப்பில் தமிழகம், இந்திய அளவில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை, 7 ஆயிரத்தைக் கடந்திருக்கிறது. நேற்று புதியதாக 669 பேர் தொற்றால் பாதிக்கப் பட்டிருப்பது கண்டறியப் பட்டுள்ளது. புதியதாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 47 பேர் தமிழகத்தில் தொற்றால் உயிரிழந்துள்ளனர். ஆறுதல் அளிக்கக்கூடிய செய்தியாக இன்று மட்டும் 135 பேர் தொற்றிலிருந்து குணம் அடைந்துள்ளனர். இதுவரை 1,959 பேர் கொரோனா தொற்றிலிருந்து…

மேலும்...

தனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பாற்றிய டாக்டர் ஜாஹித்!

புதுடெல்லி (10 மே 2020): நோன்பு திறக்கும் நேரம் நெருங்கிவிட்டது. டாக்டர் ஜாஹித் நோன்பு திறப்பதற்காக அமர்ந்து பிரார்த்தனையில் இருந்தார். அப்போது அவருக்கு அவசர அழைப்பு வந்தது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு மருத்துவராக பணிபுரிபவர் டாக்டர் ஜாஹித். கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நோயாளியை ஆம்புலன்சிலிருந்து அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்ற வேண்டும். அதற்கு டாக்டர் ஜாஹிதின் உதவி தேவை. அதற்கான அழைப்புதான் அப்போது ஜாஹிதுக்கு வந்திருந்தது. உடனே…

மேலும்...

கொரோனா வைரஸ் பாதிப்பால் குவைத்தில் இந்திய மருத்துவர் மரணம்!

குவைத் (10 மே 2020): குவைத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்திய மருத்துவர் மரணம் அடைந்துள்ளார். பல் மருத்துவரான வாசுதேவ ராவ் (54) கொரோனா வைரஸ் பாதிப்பால் குவைத்தில் உயிரிழந்துள்ளார். இவர் குவைத்தில் 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். குவைத்தில் ஏற்கனவே எகிப்தை சேர்ந்த தாரிக் ஹுசைன் என்ற மருத்துவர் உயிரிழந்த நிலையில் தற்போது குவைத்தில் கொரோனாவினால் உயிரிழந்த இரண்டாவது மருத்துவர் வாசுதேவ ராவ் என்பது குறிப்பிடத்தக்கது. Source: Gulf News

மேலும்...

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு – எந்தெந்த கடைகள் செயல்படலாம்? – முழு விளக்கம்!

சென்னை (10 மே 2020): கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் நாளை முதல் 34 வகையான கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசு திறக்க அனுமதித்த கடைகளின் விவரம் வருமாறு: டீக்கடைகள் (பார்சல் மட்டும்) பேக்கரிகள் (பார்சல் மட்டும்) உணவகங்கள் (பார்சல் மட்டும்) பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்குக் கடைகள் கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள் சிமெண்ட், ஹார்டுவேர், சானிடரிவேர் விற்கும் கடைகள் மின்…

மேலும்...

சென்னையில் இன்று மட்டும் 509 பேருக்கு கொரோனா தொற்று!

சென்னை (10 மே 2020): சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இன்று ஒருநாளில் மட்டும் 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 7,204 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் தொடர்ந்து பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. சென்னையில் இன்று ஒருநாளில் மட்டும் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

மேலும்...

ஊரடங்கு மேலும் நீட்டிப்பா? – நாளை பிரதமர் முதல்வர்களுடன் ஆலோசனை!

புதுடெல்லி (10 மே 2020): நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு 17-ம் தேதியுடன் முடியும் நிலையில் பிரதமர் மோடி நாளை பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். டெல்லியில் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். இது கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக 5-வது முறையாக நடைபெற உள்ளது. ஏற்கனவே 3-வது ஊரடங்கு அமலில் இருக்கும் இருக்கும் நிலையில் பொதுமுடக்கம் நீட்டிப்பது குறித்தும் ஏற்கனவே 17 தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள…

மேலும்...