குவைத்தில் பல்வேறு நாடுகளுக்கு மீண்டும் விமான தடை!

குவைத் (28 நவ 2021): குவைத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து நுழைய தடை விதிக்கும் வகையில் முன்பு நடைமுறையில் இருந்த சிவப்பு பட்டியல் முறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் புதிய வேரியன்ட் (ஒமிக்ரான்) பற்றிய அறிக்கைகளைத் தொடர்ந்து ஒன்பது ஆப்பிரிக்க நாடுகள் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. தென்னாப்பிரிக்கா, நமீபியா, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, மொசாம்பிக், லெசோதோ, ஸ்வதானி, ஜாம்பியா மற்றும் மலாவி ஆகிய நாடுகளுக்கு விமானப் போக்குவரத்துத் துறை தடை விதித்துள்ளது. இந்த நாடுகளில் இருந்து வரும்…

மேலும்...

சவூதி அரேபியாவிலிருந்து விடுமுறையில் சென்ற வெளிநாட்டவர்களின் இக்காமா மற்றும் விசா காலாவதி காலம் மீண்டும் இலவச நீட்டிப்பு!

ரியாத் (28 நவ 2021): சவூதி அரேபியாவில் இருந்து விடுமுறையில் வெவ்வேறு நாடுகளுக்குச் சென்ற வெளிநாட்டினரின் விசா மற்றும் இக்காமா காலாவதி காலம் வரும் ஜனவரி 2022 31 ஆம் தேதி வரை இலவசமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்தபடி நவம்பர் 31 ஆம் தேதி நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் விசாக்கள் ஜனவரி 31, 2022 வரை நீட்டிக்கப்படும். சவூதிக்கு வர முடியாமல் நாட்டில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டவர்களுக்கு இந்த முடிவு பயனுள்ளதாக இருக்கும். சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான்…

மேலும்...

கொரோனா புதிய வைரஸ தற்போதைய தடுப்பூசிகள் தடுக்குமா?

ஜெனீவா (28 நவ 2021): தென் ஆப்பிரிக்காவில் நவம்பர் 24-ந் தேதி கண்டறியப்பட்டுள்ள பி.1.1.529 வைரசுக்கு உலக சுகாதார அமைப்பு சூட்டியுள்ள பெயர்தான் இது. இந்த பெயர், கிரேக்க எழுத்துகளின் 15-வது எழுத்து என்கிறார்கள். இந்த வைரஸ் தொடர்பாக நேற்று முன்தினம் சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் உலக சுகாதார அமைப்பின் வல்லுனர் குழு அவசரமாக கூடி விவாதித்தது. அதில், இந்த உருமாறிய வைரசை உலக சுகாதார அமைப்பு வி.ஓ.சி. அதாவது, கவலைக்குரிய பிறழ்வு என்று வகைப்படுத்தி…

மேலும்...

அச்சுறுத்தும் புதுவகை கொரோனா வைரஸ்!

தென் ஆப்பிரிக்கா (26 நவ 2021): உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா தொற்று பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருந்த நிலையில், தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மக்களின் அன்றாட வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளது. இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு அச்சுறுத்தலை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் ஏற்கெனவே நாம் அடையாளப்படுத்திய கொரோனா வைரஸ்களை காட்டிலும் வேறுபட்டுள்ளது. சாதாரணமாக கொரோனா வைரஸ்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு எளிதாக பரிணாமமடையக்கூடியதாகும். அந்த வகையில் B.1.1.529…

மேலும்...

டிசம்ப 15 முதல் இந்தியாவிலிருந்து மீண்டும் சர்வதேச விமான சேவை தொடக்கம்!

புதுடெல்லி (26 நவ 2021): எதிர் வரும் டிசம்பர் 15 முதல் மீண்டும் தொடங்கப்படும் என விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்கி மீண்டும் டிசம்பர் மாதத்தில் சர்வதேச விமான போக்குவரத்திற்கு சேவை தொடங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு பெரும் அச்சுறுத்தலை உருவாக்கிய நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச விமான போக்குவரத்திற்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. இதனையடுத்து,…

மேலும்...

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ 4 லட்சம் வழங்க ராகுல் காந்தி கோரிக்கை!

புதுடெல்லி (24 நவ 2021): கோவிட்டால் இறந்தவர்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ” கோவிட் காரணமாக இறந்தவர்கள் குறித்த நம்பகத்தகுந்த தகவல்களை அரசு வழங்க வேண்டும். அதேபோல், இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது காங்கிரசின் கோரிக்கை. மக்களின் வேதனையை அரசு குறைப்பதுடன், அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். குஜராத் மாடல் என பரபரப்பாக…

மேலும்...

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பட்டியலை தயாரிக்க உத்தரவு!

சென்னை (17 நவ 2021): தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பட்டியலை தயாரிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட தகுதியான நபர்களில், 73 சதவீதம் பேருக்கு, முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசி 35 சதவீதம் நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த அனைவருக்கும், விரைவில் தடுப்பூசி கிடைத்திடும் வகையில், வாரம்தோறும் ஒரு சிறப்பு தடுப்பூசி முகாமுக்கு பதிலாக, இரண்டு சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்த அரசு உத்தேசித்துள்ளது. மேலும், இதுவரை…

மேலும்...

கத்தாரில் கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் கால அளவு மாற்றம்!

தோஹா (16 நவ 2021): கத்தாரில் கோவிட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் பெறுவதற்கான தகுதி காலம் குறைக்கப்பட்டுள்ளது. கத்தாரில் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுத்து எட்டு மாதங்களுக்குப் பிறகு எடுக்க வேண்டும் என்ற நிபந்தனையை சுகாதார அமைச்சகம் மாற்றியுள்ளது. அதன்படி தற்போது இரண்டு டோஸ் எடுத்து ஆறு மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் டோஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு தடுப்பூசிகளுக்கும் ஆறு மாதங்களுக்குப் பிறகு நோய் எதிர்ப்பு சக்தி படிப்படியாகக் குறையும் என்ற…

மேலும்...

சிங்கப்பூரில் சீறிப்பாயும் கொரோனா!

சிங்கப்பூர் (28 அக் 2021): சிங்கப்பூரில் இன்று (அக்.,28 ம் தேதி) சில மணி நேரங்களிலேயே 5,324 பேரை கொரோனா தாக்கியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் டெல்டா ரகம் தற்போது சீனா மற்றும் இதர தெற்காசிய நாடுகளில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சிங்கப்பூரில் உள்ள வேற்று நாட்டு தொழிலாளர்கள் வசிக்கும் விடுதிகளில் வைரஸ் தாக்கம் அதிவேகமாகப் பரவி வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சில மணி நேரங்களிலேயே 5,324 பேர் கொரோனா தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களுள் 66…

மேலும்...

சவூதிக்கு வரமுடியாமல் தவிப்பவர்களின் விசா காலம் மேலும் நீட்டிப்பு!

ரியாத் (25 அக் 2021): சவூதிக்கு பயணத் தடை உள்ள நாடுகளை சேர்ந்தவர்களின் வருகை (விசிட்) விசாவின் செல்லுபடியாகும் காலம் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்படும் என்று சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன்மூலம் பயணத் தடை உள்ள ​​இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, எகிப்து, துருக்கி, பிரேசில், எத்தியோப்பியா, வியட்நாம், ஆப்கானிஸ்தான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் பயனடைவார்கள். . கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவியதைத் தொடர்ந்து அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின்படி…

மேலும்...