இந்தியாவில் கொரோனாவிற்கு ஒரே நாளில் 666 பேர் பலி!

புதுடெல்லி (23 அக் 2021): இந்தியாவில் இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 666 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16 ஆயிரத்து 326 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (கேரளாவில் மட்டும் 9,361 பேர்) மேலும் கேரளாவில் 99 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இதன்படி மொத்த இறப்பு எண்ணிக்கை 27,765 ஆக உயர்ந்ததாக கேரள சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது. கேரள மாநிலத்தின்…

மேலும்...

மக்கா மற்றும் மதீனாவில் லட்சக் கணக்கானோர் வெள்ளிக்கிழமை தொழுகையில் பங்கேற்பு!

ரியாத் (23 அக் 2021): மக்கா மற்றும் மதீனா பெரிய மசூதிகளில் தொழுகை மற்றும் பிரார்த்தனைக்கு முழு நுழைவை அனுமதிக்கும் சட்டம் இயற்றப்பட்ட பிறகு நேற்று வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக்கு லட்சக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். மக்கா மதீனாவில் பிரார்த்தனைகளில் இப்போது சமூக இடைவெளி தேவையில்லை என அறிவிக்கப் பட்டது. அதேவெளை சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக விரிவான வசதிகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை, மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராமில், டாக்டர். மாஹிர் அல்-முய்கிலி ஜும்ஆவை வழிநடத்தினார். ஜும்ஆவுக்கு…

மேலும்...

குவைத் மசூதிகளில் தொழுகையில் சமூக இடைவெளிக்கு விலக்கு!

குவைத் (22 அக் 2021): குவைத் மசூதிகளில் தொழுகையில் தோளோடு தோள் நின்று தொழ வெள்ளிக்கிழமை முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குவைத்தில் கொரோனா பரவலிலிருந்து ஓரளவுக்குக் கட்டுக்குள் உள்ள நிலையில், படிப்படியாக நாடு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை, அக்டோபர் 22, தொழுகைகளில் இருந்து மசூதிகளில் சமூக தூரத் தேவையை விலக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று முதல், ,தொழுகையின்போது ஒவ்வொரு விசுவாசிக்கும் இடையே ஒன்றரை மீட்டர் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற…

மேலும்...

சீனாவை மீண்டும் மிரட்டும் புதிய வகை கொரோனா வைரஸ்!

உகான் (22 அக் 2021): சீனாவில் தொடங்கி உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இன்னும் முடிந்த பாடில்லை. இந்நிலையில் சீனாவின் வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஐந்தாவது நாளாக தொற்று அதிகமானோருக்கு பரவியதை அடுத்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தொற்று பரவலை தடுக்க 40 லட்சம் பேர் வசிக்கும் லான்சோ நகரில் இருந்து மக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. லான்சோ நகரில் இருந்து பிற மாகாணங்களுக்கு செல்ல…

மேலும்...

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி மூன்றாவது டோஸ் – சவூதி சுகாதாரத்துறை அறிவிப்பு!

ரியாத் (21 அக் 2021): 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி மூன்றாவது டோஸ் போடுவதற்கு சவூதி சுகாதாரத்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே தீவிர உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்பட்டவர்கள், முதியவர்கள், சிறுநீரக நோய் உள்ளவர்கள் மற்றும் கோவிட் வளரும் அதிக ஆபத்து உள்ளவர்களுக்கு கோவிட் பூஸ்டர் ஊசி வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கோவிட் பூஸ்டர் ஊசி வழங்க சவூதி சுகாதாரத்துறை…

மேலும்...

இந்தியா சவூதி அரேபியா இடையேயான சார்ட்டட் விமான சேவை நிறுத்தம்!

புதுடெல்லி (18 செப் 2021): இந்தியா சவூதி அரேபியா இடையேயான சார்ட்டட் விமான சேவை நிறுத்தப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்தியா சவூதி அரேபியா இடையே வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சார்ட்டட் விமான சேவை மட்டுமே இயங்கி வந்தன. ஆனால் தற்போது UAE கத்தார், பஹ்ரைன், ஓமன் மற்றும் இலங்கை போன்ற நாடுகளின் மூலம் இணைப்பு விமான சேவைகள் இப்போது இலகுவாக கிடைக்கின்றன. இதனால் இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஏர் இந்தியா ஆகியவை சவுதி அரேபியாவிலிருந்து…

மேலும்...

துபாய் வழியாக சவூதி செல்ல இந்தியர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!

ரியாத் (10 செப் 2021): சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே மீண்டும் விமான சேவை இயக்கப்பட அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் தினசரி புக்கிங்குகளை தொடங்கியுள்ளது. கோவிட் பரவலை தடுக்கும் விதமாக சவூதி அரேபியா கடும் விமான போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்நிலையில் தற்போது கட்டம் கட்டமாக விமான போக்குவரத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சவூதி துபாய் விமான போக்குவரத்து தடை நீக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சவூதிக்கு…

மேலும்...

சென்னை விமான நிலைய நிர்வாக சீர்கேட்டால் காற்றில் பறந்த சமூக இடைவெளி!

சென்னை (06 செப் 2021): கோவிட் சூழலில் பயணிகளை வழி நடத்துவதில் சென்னை விமான நிலைய நிர்வாக சீர்கேடு மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி அதிகாலை வளைகுடா நாடுகளிலிருந்து ஒரே நேரத்தில் மூன்று விமானங்கள் தரையிரங்கின. அதில் வந்த ஏராளமான பயணிகளை வழி நடத்துவதில் சென்னை விமான நிலைய நிர்வாகம் தோல்வியடைந்துள்ளது. கோவிட் பரவலை தடுக்க எடுக்கப்படும் மிக முக்கிய நடவடிக்கை சமூக இடைவெளி. ஆனால் அது சென்னை விமான நிலையத்தில்…

மேலும்...
TN-Students

ஆசிரியர்கள் மணவர்கள் அதிர்ச்சி – இருவருக்கு கொரோனா பாதிப்பு!

கடலூர் (04 செப் 2021): கடலூர் மஞ்சக்குப்பம் கோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை ஒருவருக்கும் அரியலூர் அரசுப் பள்ளி மாணவி ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்து, பல்வேறு தரப்பினர் மத்தியிலும் தமிழக அரசு ஆலோசனை நடத்தியதன் பயனாக கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளன. முதற்கட்டமாக 9, 10, 11,…

மேலும்...

துபாயில் கொரோனாவால் ஒரு மரணம் கூட இல்லாத நாள் இன்று!

துபாய் (03 செப் 2021): ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் ஒரு மரணம் கூட நிகழவில்லை என்று சுகாதரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களாக உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் ஒவ்வொரு நாடும் தினமும் ஒருவரையாவது இழந்து கொண்டு இருக்கிறது. இந்நிலைய்ல் கடந்த ஆண்டு நவம்பர் 14 அடுத்து துபாயில் கடந்த 24 மணி நேரத்தில், ஒரு கோவிட் மரணம் கூட பதிவாகவில்லை. கடுமையான கோவிட் விதிகள் மற்றும்…

மேலும்...