கொரோனாவோடு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போனது ஏன் – கமலுக்கு சுகாதாரத்துறை கேள்வி!

சென்னை (07 டிச 2021): கொரோனா சிகிச்சைக்குப்பின் நேரடியாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போனது குறித்து கமலுக்கு சுகாதாரத்துறை விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பவுள்ளது. தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருக்கிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசன் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கமுடியாத நிலை ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் கமல்ஹாசன், சில…

மேலும்...

இந்தியாவில் மூன்றாவது அலை பிப்ரவரியில் உச்சத்தை தொடும் – விஞ்ஞானிகள் கருத்து!

கான்பூர் (07 டிச 2021): இந்தியாவில் பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தை தொடும் என்று ஐஐடி விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விஞ்ஞானி மனிந்திர அகர்வால் தெரிவிக்கையில், இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில், தினமும் ஒன்று முதல் ஒன்றரை லட்சம் கொரோனா வழக்குகள் பதிவாகலாம். ஆனால் மூன்றாவது அலை இரண்டாவது அலையை விட குறைவாக இருக்கும் என்று கூறினார். மேலும் ஓமிக்ரான், டெல்டாவை விட அதிக சக்தி வாய்ந்தது, ஆனால் குறைவான தீவிரம் கொண்டது என்று அகர்வால் தெரிவித்தார்….

மேலும்...

இந்தியாவில் அதிகரிக்கும் ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி (05 டிச 2021): இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த சூழலில், உருமாறிய புதிய வகை கொரோனாவான ஒமிக்ரான், பரவல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக கடந்த 24-ந் தேதி கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் 10 நாட்களில் 38-க்கும் மேற்பட்ட நாடுகளில் கால் பதித்து உலகை அதிர வைத்து வருகிறது. ஒமைக்ரான் வைரஸ் தோன்றியுள்ள தகவல் வெளியானதும் இந்தியா உஷாரானது. எனினும் இந்தியாவையும் ஒமைக்ரான் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கர்நாடகா, குஜாரத், டெல்லி மற்றும்…

மேலும்...

ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் – லாக்டவுன் உண்டாகுமா? -சவூதி அரேபியா விளக்கம்

ரியாத் (03 டிச 2021): ஒமிக்ரான் வைரஸ் பரவல் அச்சுறுத்தல் இருந்தபோதும் லாக்டவுன் உள்ளிட்ட நடவடிக்கைகளை சவூதி அரேபியா எடுக்காது என்று அந்நாட்டு சுகாதார அமச்சகம் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவை சேர்ந்த ஒருவருக்கு மட்டும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் எழுபத்தைந்து சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி  போட்டு முடித்துள்ளனர், எனவே கவலைப்பட எதுவும் இல்லை என சவூதி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேவேளை ஒமிக்ரான் வைரஸ் தொற்று…

மேலும்...

இந்தியாவில் இருவருக்கு ஒமிக்றான் தொற்று!

பெங்களூரு (02 டிச2021): இந்தியாவில் இருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனாவைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் தற்போது ஒமிக்ரான் என்ற சொல்லைக் கேட்டாலே அச்சமடைந்து வருகின்றன. தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை மற்றும் வீரியமிக்க வைரசுக்கு ஒமிக்ரான் என்று விஞ்ஞானிகள் பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில் கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இருவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேவேளை மக்கள்…

மேலும்...

துபாய் மற்றும் சவூதி அரேபியாவிற்குள் நுழைந்த ஒமிக்ரான் வைரஸ்!

துபாய் (02 டிச 2021): கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரான் வைரஸ் நுழைந்ததை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் உறுதிபடுத்தியுள்ளன. கொரோனாவைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் தற்போது ஒமிக்ரான் என்ற சொல்லைக் கேட்டாலே அச்சமடைந்து வருகின்றன. தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை மற்றும் வீரியமிக்க வைரசுக்கு ஒமிக்ரான் என்று விஞ்ஞானிகள் பெயர் வைத்துள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளில் இது அதி வேகமாக பரவி வரும் நிலையில், சவூதி அரேபியா மற்றும்…

மேலும்...

ஒமிக்ரான் வைரஸ் குறித்து ஃபைஸர் நிறுவனம் சொல்வது என்ன?

நியூயார்க் (01 டிச 2021): தங்கள் நிறுவனத்தின் தற்போதைய தடுப்பூசி ஒமிக்ரானுக்கு எதிராக செயல்படாமல் போகலாம் என்பதால், அதற்கு எதிரான ஒரு தடுப்பூசி வெர்சனை உருவாக்கும் பணியை ஏற்கனவே தொடங்கிவிட்டதாக அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்கா நாட்டில் 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளுடன் பி.1.1.529 என்ற புதிய கரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளது. இந்த 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளில், 30க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் வைரஸின் ஸ்பைக் ப்ரோட்டினில் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் என உலக சுகாதார நிறுவனத்தால் பெயரிடப்பட்டுள்ள இந்தப்…

மேலும்...

சவூதி அரேபியாவின் புதிய உத்தரவு இந்தியர்களுக்கும் பொருந்தும்!

ரியாத் (30 நவ 2021): சவூதி அரேபியாவில் இருந்து விடுமுறையில் வெவ்வேறு நாடுகளுக்குச் சென்ற வெளிநாட்டினரின் விசா மற்றும் குடியுரிமை அட்டை (இக்காமா) காலாவதி காலம் வரும் ஜனவரி 31, 2022 வரை இலவசமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இது இந்தியர்களுக்கும் பொருந்தும். ஏற்கனவே அறிவித்தபடி நவம்பர் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் விசாக்கள் ஜனவரி 31, 2022 வரை நீட்டிக்கப்படும். சவூதிக்கு வர முடியாமல் நாட்டில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டவர்களுக்கு இந்த முடிவு பயனுள்ளதாக இருக்கும். சவூதி…

மேலும்...

12 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு 7 நாள் தனிமைபப்டுத்தல் அவசியம் -தமிழக சுகாதாரத்துறை!

சென்னை (28 நவ 2021): கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஓமிக்ரான், பல்வேறு நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, தமிழகத்திற்கு 12 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு 7 நாள் தனிமைபப்டுத்தல் தமிழகத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆபத்தான நாடுகளின் பட்டியலில் 12 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசில், பங்களாதேஷ், போட்ஸ்வானா, சீனா, மொரிஷியஸ், நியூசிலாந்து, சிங்கப்பூர், ஜிம்பாப்வே, ஹாங்காங் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இதில் வளைகுடா நாடுகள் இடம்பெறவில்லை. 12 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு…

மேலும்...

மீண்டும் ஊரடங்கு – முதல்வர் உத்தரவு!

மும்பை (28 நவ 2021): ஒமிக்ரான் வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக மகாராஷ்டிராவில் ஊரடங்கிற்கு நிகரான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தெரிகிறது. கொரோனாவின் புதிய திரிபான ஒமிக்ரான் அதிவேகத்தில் பரவக்கூடியது என்பது பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்நிலையில், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், மண்டல ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய கொரோனா ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. ஏற்கெனவே ஒமிக்ரான் கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காவல்துறை அதிகாரிகள், விமான நிலைய…

மேலும்...