கொரோனா பரவல் – பஹ்ரைனில் மசூதிகள் மீண்டும் மூடல்!

Share this News:

பஹ்ரைன் (10 பிப் 2021): கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பஹ்ரைனில் இரண்டு வாரங்களுக்கு மசூதிகள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு பிப்ரவரி 11 முதல் நடைமுறைக்கு வரும். கோவிட் மீண்டும் பரவுவதை அடுத்து இந்த அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பஹ்ரைனில் நேற்று மட்டும் 719 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 323 பேர் வெளிநாட்டவர்கள். மேலும் கொரோனா பாதிப்பால் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். . தற்போது, ​​6036 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 46 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். மேலும் 461 பேர் குணமாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply