கத்தார் விசா எடுப்பது எப்படி?

விசா விதிகள் தளர்த்தப் பட்டதால் கத்தார் பணியாளர்கள் மகிழ்ச்சி!

கத்தார் (04 டிசம்பர் 2023): கத்தார் நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது உள்துறை அமைச்சகம் (Ministry of Interior). தற்போது, குடும்பக் குடியுரிமை (Family Residency) மற்றும் வருகை (Visit Visa) வுக்கான விதிமுறைகள் தளர்த்தப் பட்டு உள்ளன. இதன்படி, கீழ்க்கண்ட புதிய விதிகளுக்கு உட்பட்டு கத்தாரில் பணிபுரியும் எவரும், தமது குடும்ப உறுப்பினர்களை கத்தாருக்கு அழைக்க இயலும். குடும்பக் குடியுரிமை (Family Residency) க்கான புதிய விதிமுறைகள்: 1- அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச…

மேலும்...

கத்தாரில் நடைபெறும் ராட்சதப் பலூன் திருவிழா!

தோஹா (03 டிசம்பர் 2023): கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் ராட்சதப் பலூன் திருவிழா நடைபெறுகிறது. ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்படும் இந்த திருவிழா சமயத்தில், நகரங்கள் முழுக்க பல்வேறு வடிவங்களினால் ஆன பலூன்கள் வானில் பறப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். எதிர்வரும் டிசம்பர் 7-ஆம் தேதி துவங்கும் இந்த பலூன் திருவிழா, கத்தார் நாட்டின் தேசிய நாளான டிசம்பர் 18, 2023 வரை நடைபெறும். தோஹாவில் உள்ள கட்டாரா (Katara) பகுதியில் இந்தத் திருவிழா நடைபெறும். திருவிழாவின் சிறப்பு…

மேலும்...

வாடிக்கையாளர்கள் புறக்கணிப்பால் விலைகளைக் குறைக்கிறது மெக் டொனால்டு உணவகம்!

ரியாத், சவூதி (29 நவம்பர் 2023): மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மெக் டொனால்ட் உணவங்களில் விலைகள் வரலாறு காணாத அளவுக்கு குறைக்கப் படுகின்றன. வாடிக்கையாளர்கள் மெக் டொனால்ட் உணவை புறக்கணித்ததால் இந்த சூழல் ஏற்பட்டுள்ளது. பாலஸ்தீனின் காஸா பகுதியில் பொதுமக்கள் மீது இஸ்ரேல் கடந்த 50 நாட்களாகத் தொடர்ந்து குண்டு வீசி இனப்படுகொலை செய்து வருகிறது. போர்க் குற்றமாக கருதப்படும் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் போன்ற இடங்களைக் குறி வைத்து தாக்கி வருகிறது. இஸ்ரேலிய ஆதரவு (Support):…

மேலும்...

பாலஸ்தீன்-இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

பாலஸ்தீன் (22 நவம்பர் 2023): பாலஸ்தீனப் போராளிகளான ஹமாஸ் இயக்கத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையே தற்காலிக போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. கடந்த 50 நாட்களாக காஸா- பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் இஸ்ரேலின் குண்டு மழையை நிறுத்தி பாலஸ்தீனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை தடுக்க தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வரும் கத்தார், இந்த ஒப்பந்தத்தை ஏற்பாடு செய்கிறது. இந்த ஒப்பந்தத்தின்படி, அடுத்த ஐந்து நாட்களுக்கு காஸா பகுதியில் முழுமையாக போர் நிறுத்தப் படுகிறது. தரை வழியாகவோ, வான்…

மேலும்...

கத்தார்-பஹ்ரைன் இணைக்கும் பாலம் கட்டும் பணி துவக்கம்!

மனாமா, பஹ்ரைன் (18 நவம்பர் 2023):  பஹ்ரைன் நாட்டின் இளவரசரும், பிரதமருமான எச் ஆர் எச் இளவரசர் சல்மான் பின் ஹமத் அல் கலீஃபாவும், கத்தார் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரான ஷேக் முஹம்மது பின் அப்துர் ரஹ்மானும் இன்று பஹ்ரைனில் சந்தித்துக் கொண்டனர். அதிகாரப் பூர்வமாக நடந்த இச் சந்திப்பில், கத்தார் மற்றும் பஹ்ரைனுக்கு இடையிலான ஒத்துழைப்பினை மேம்படுத்துவதற்கான வழிகள் பற்றி கலந்துரையாடப் பட்டது. இந்த சந்திப்பில் கத்தார்-பஹ்ரைன் பாலம் திட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது. சந்திப்பின் முடிவில்…

மேலும்...

இஸ்ரேலிடம் பேசிப் பயனில்லை; இனி அதிரடி நடவடிக்கை! – கத்தார் மன்னர் அறிவிப்பு

ரியாத் – சவூதி அரேபியா (12 நவம்பர் 2023): ரியாத்தில் உள்ள தேசிய மாநாட்டு மையத்தில் கூட்டு அரபு-இஸ்லாமிய அசாதாரண உச்சி மாநாடு (Joint Arab-Islamic Extraordinary Summit) நேற்று நடைபெற்றது. இந்த அவசர கால உச்சிமாநாட்டில் அனைத்து அரபு நாட்டுத் தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட கத்தார் நாட்டின் மன்னரான ஷேக் தமீம் பின் ஹாமத் அல்-தானி ஆற்றிய உரை, போர்க்காலச் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கத்தாரின்…

மேலும்...

ஒரே விசாவில் இனி ஒட்டு மொத்த வளைகுடா பயணிக்கலாம்!

தோஹா, கத்தார் (09 நவம்பர் 2023):  வளைகுடா நாடுகளில் வசிப்பவர்கள் மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் இனி கத்தார், சவுதி அரேபியா, குவைத், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு ஒரே விசாவில் பயணிக்க முடியும். வளைகுடா ஒத்துழைப்பு சபையில் (Gulf Cooperation Council) உள்ள ஆறு நாடுகளுக்கான ஒருங்கிணைந்த சுற்றுலா விசாவுக்கு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், ஓமனின் மஸ்கட்டில் நடைபெற்ற GCC உள்துறை அமைச்சர்களின் 40வது கூட்டத்தின்போது GCC-இன் பொதுச்செயலாளர் ஜாசிம்…

மேலும்...

மீண்டும் வெளிச்சத்திற்கு வந்த இஸ்ரேலின் பொய் புகார்!

பாலஸ்தீன்(08 நவம்பர், 2023): பாலஸ்தீனில் உள்ள “ஷேக் ஹமத் பின் கலீஃபா” மருத்துவனைக் கட்டடத்தின் கீழ் பகுதியில் ஹமாஸ் போராளிகளுக்கான சுரங்கப்பாதை உள்ளது என இஸ்ரேல் சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தது. இதனால், சமீபத்தில் இம் மருத்துவமனையும் இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதலுக்கு உள்ளானது. பாலஸ்தீன் – இஸ்ரேல் போர் காரணமாக, பாலஸ்தீன் காஸா பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், ஐநா மையங்கள் ஆகியவற்றை இஸ்ரேல் தாக்கி வருகிறது. இன்று வரை பாலஸ்தீனில் 10,600 பொதுமக்கள்…

மேலும்...

கத்தார் தோஹாவில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து!

தோஹா (23 மார்ச் 2023): கத்தார் தோஹா அல் மன்சூராவில் ஒரு குடியிருப்பு கட்டிடம் பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை 8.18 மணியளவில் மன்சூரா பி ரிங் சாலையில் உள்ள லுலு எக்ஸ்பிரஸ்ஸின் பின்புறம் உள்ள பல மாடி கட்டிடம் அருகில் உள்ள மூன்று மாடி கட்டிடத்தின் மேல் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இடிபாடுகளில் இருந்து 7 பேர் மீட்கப்பட்டனர். இந்த தகவலை கத்தார் சிவில் டிஃபென்ஸ்…

மேலும்...

கத்தாரில் ஹயா அட்டை வைத்திருப்பவர்களுக்கு அவசர உத்தரவு!

தோஹா (21 ஜன 2023): ஹயா அட்டை வைத்திருப்பவர்கள் 23 நாட்களுக்குள் கத்தாரை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. FIFA 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக, ஹயா அட்டையில் கத்தாருக்கு வந்தவர்கள் ஜனவரி 23 ஆம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். ஹயா அட்டையில் கத்தாருக்கு வருபவர்கள் நவம்பர் 1 முதல் ஜனவரி 23 வரை அனுமதிக்கப்பட்டனர். இன்னும் சில மணிநேரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், நேரம் நீட்டிக்கப்படும்…

மேலும்...