கத்தார் தேசிய விளையாட்டு தினம்!

தோஹா (11 பிப் 2020): கத்தார் நாட்டில் ஒன்பதாவது தேசிய விளையாட்டு தினம் பிப் 11 செவ்வயன்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, காலை, கத்தார் விளையாட்டு கழகத்தில் உள்ள சுஹைம் பின் ஹமத் அரங்கத்தில் கத்தார் போலீஸ் விளையாட்டுக் கூட்டமைப்பு (QPSF) சார்பில், மூத்த அதிகாரிகள் முன்னிலையில் பல விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்ச்சியில், கத்தார் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஷேக் காலித் பின் கலிஃபா பின் அப்துல் அஜிஸ் அல்-தாணி (Sheikh Khalid…

மேலும்...

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீனாவுக்கு கத்தார் செய்த உதவி!

தோஹா (05 பிப் 2020): சீனாவிற்கு மருந்துவ உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளதாக கத்தாருக்கான சீன தூதுவர் Zhou Jian அவர்கள் தெரிவித்துள்ளார். சீனாவில் வூஹான் கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், கத்தாரிலிருந்து சீனாவிற்கு மருத்துவ உதவி பொருட்கள் அனுப்பப் பட்டுள்ளன. அதில் முகமூடிகள், கையுறைகள் உட்பட மருந்துப் பொருட்கள் உள்ளடங்கியுள்ளதாக Zhou Jian தெரிவித்துள்ளார். மேலும், கத்தார் நாடும் சீனாவும் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளதாகவும் அவர்களின் ஆரோயக்கியம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் கத்தார்…

மேலும்...

கத்தார் நாட்டில் துவங்கியது தேசிய முகவரிச் சட்ட கணக்கெடுப்பு!

தோஹா (27 ஜன 2020): வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தர் நாட்டில் வரும் திங்கள் கிழமை (இன்று) முதல் தேசிய முகவரிச் சட்ட கணக்கெடுப்பு துவங்குகிறது. தேசிய முகவரிச் சட்டம் (National Address Law) என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள இந்தப் பதிவேடு மூலம், கத்தர் நாட்டுப் பிரஜைகள் மற்றும் கத்தரில் தங்கியுள்ள வெளிநாட்டவர் அனைவரும் இன்றுமுதல் ஆறு மாதங்களுக்குள் பதிவு செய்தாக வேண்டும். இதனை உள்துறை அமைச்சகம் (Ministry of Interior) அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று பதிவு…

மேலும்...

மிதக்கும் ஹோட்டல்கள்: புதுமை படைக்கிறது கத்தார்!

கத்தார் (20 ஜன 2020): புதுப்புது திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துவதில் முன்னணி நாடாகத் திகழும் (தோஹா) கத்தாரில், மிதக்கும் ஹோட்டல்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் சர்வதேச 2022 FIFA விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு, பல்வேறு கட்டுமானப் பணிகளையும் புதிய விரிவாக்கப் பணிகளையும் நாடு முழுக்க துரிதமாகச் செய்து வருகிறது கத்தார். அதன் ஒரு அங்கமாக, கத்தாரின் கெடைஃபேன் தீவில் 1,616 அறைகளைக் கொண்ட பிரம்மாணமான மிதக்கும் ஹோட்டல்கள் அமைக்கப் பட்டு வருகின்றன. கத்தாரா நிறுவனம் இதற்கான உரிமையைப்…

மேலும்...

கத்தாரில் அவசர சிகிச்சைக்கு உதவும் வகையில் ட்ரோன் சேவை அறிமுகம்!

தோஹா (09 ஜன 2020): அவசரச் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸுகளுக்கு உதவும் வகையில் ஆளில்லா விமான (ட்ரோன்)  சேவையை கத்தார் நாடு அறிமுகப்படுத்தியுள்ளது. விபத்து உள்ளிட்ட சம்பவங்களில் பாதிக்கப் பட்டவர்களுக்கு துரிதமாக மருத்துவ உதவி கிடைக்கும் வகையில், ட்ரோன்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து செல்லும். சம்மந்தப் பட்ட இடம், நோயாளி, மற்ற தேவைகள் குறித்து துல்லியமாகப் படம் பிடித்து உடனடியாக ஆம்புலன்ஸ் அதிகாரிகளுக்கு அனுப்பும். இதன்மூலம் நோயாளியின் தன்மையை முன்கூட்டியே அறிந்து ஆம்புலன்ஸுகள் விரைவில் சம்பவ இடங்களுக்குச்…

மேலும்...

ஓய்ந்த தூரிகையும் ஒட்டாத வர்ணங்களும்!

இந்தியாவின் பிக்காஸோ என்ற பெருமை பெற்ற ஓவியர் மக்புல்ஃபிதா ஹுசைன் உலகு நீத்துவிட்டார். இந்தியா தன்னைப் பெருமைப்படுத்திய புதல்வர்களுள் மேலும் ஒருவரை இழந்திருக்கிறது. சர்வதேச அளவில் ஊடகங்களும், கலைஞர்களும் அவருக்குப்பெரும் புகழஞ்சலி செலுத்துகின்றனர். இருந்தபோதிலும், தன் கடைசி காலத்தில் தாய்நாட்டில் இருக்க முடியாமல் ‘துரத்தியடிக்கப்பட்டு’ வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தரில் குடியுரிமைப் பெற்றிருந்தார் அவர். நாட்டின் ஒரு பெரும் கலைஞனை, கடைசி காலத்தில் ‘துரத்தியடித்த’ தீராப் பழியை இந்திய தேசம் சுமக்கிறது. அதற்குக் காரணமாக, அவருடைய ஒருசில…

மேலும்...