சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின் என்பவர் ஜோர்டானிலிருந்து ஜிசான் செல்லும் வழியில் ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்தார். சடலம் அல் லெய்த் அரசு மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மரணம் பற்றி அறிந்ததும் அவரது கணவர் ஜிசானிலிருந்து சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். விபத்தில் மூன்று குழந்தைகள், மூன்று…

மேலும்...

சவூதி அரேபியாவிற்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில் வருபவர்களை புதுப்பிக்க முடியாது. காலக்கெடுவுக்குப் பிறகு அவர்கள் சவுதி அரேபியாவில் தங்கியிருக்கும் ஒவ்வொரு நாளும் நூறு ரியால்கள் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஒரு வருட மல்டி என்ட்ரி டூரிஸ்ட் விசாவில் விண்ணப்பிப்பவர்கள் சவுதி அரேபியாவில் அதிகபட்சம் 90…

மேலும்...

சவூதியில் மழை, புழுதிக் காற்று தொடரும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

ரியாத் (13 மார்ச் 2023): சவூதியின் பல்வேறு பகுதிகளில் தற்போது பெய்து வரும் மழை மற்றும் புழுதிக்காற்று எதிர்வரும் வியாழக்கிழமை வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆசிர், அல்பாஹா, ஹைல், அல் காசிம், நஜ்ரான், ஜிசான் மற்றும் மக்கா, ரியாத் மற்றும் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் நேற்று லேசான மழை பெய்துள்ளது. மக்கா, ரியாத், அல் ஜூஃப், வடக்கு எல்லை, மதீனா, கிழக்கு மாகாணம் மற்றும் அல் காசிம் ஆகிய இடங்களில்…

மேலும்...

72 நாடுகளுக்கு சவூதி பேரீச்சம்பழம் இலவச விநியோகம் தொடங்கியது!

ஜித்தா (13 மார்ச் 2023) 72 நாடுகளுக்கு இந்த ஆண்டுக்கான சவூதி பேரீச்சம்பழ இலவச விநியோகம் தொடங்கியுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள நட்பு நாடுகளுக்கு சவூதி அரேபிய அரசு பேரீச்சம் பழங்களை பரிசாக வழங்குகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 140 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இதனால் பயனடைகின்றனர். பேரிச்சம்பழம் பரிசளிக்கும் திட்டம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆசியா, ஆபிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய நான்கு கண்டங்களில் உள்ள 72 நாடுகளுக்கு இம்முறை பேரிச்சம்பழம்…

மேலும்...

புனித ரமலான் உம்ரா குறித்து சவூதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவிப்பு!

ஜித்தா (06 மார்ச் 2023): புனித ரமலான் மாதத்தில் உம்ரா செய்வதற்கு இதற்கென உள்ள அப்ளிகேஷனில்அனுமதி பெற்ற பின்னரே உம்ரா செய்ய முடியும் என சவூதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த நிபந்தனை உள்ளூர் மற்றும் வெளிநாட்டவர்களுக்கும் பொருந்தும் என சவுதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளது. சவூதி உம்ரா மற்றும் ஹஜ் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட NUSK செயலி மூலமாகவோ அல்லது தவகல்னா செயலி மூலமாகவோ உம்ரா அனுமதி பெறலாம். கோவிட் நோயால்…

மேலும்...

சவுதி அரேபியாவில் வங்கி மோசடி கும்பல் கைது!

ரியாத் (03 மார்ச் 2023): : சவுதி அரேபியாவில், வங்கி மோசடியில் ஈடுபட்டு பணம் பறிக்கும் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதில் தொடர்புடைய 13 பேரை போலீசார் கைது செய்தனர். அலைபேசியில் அழைத்து வங்கி விவரங்களை கேட்டு மிரட்டி பணம் பறிப்பதை இவர்கள் தொடர்ந்து செய்து வந்துள்ளனர். வங்கி அதிகாரிகள் போல் நடித்து பலரை இவர்கள்…

மேலும்...

சவூதியில் நிலநடுக்கத்திலிருந்து கட்டிடங்களை பாதுகாக்க புதிய கட்டிட குறியீடு

ஜித்தா (25 பிப் 2023): சவுதி அரேபியாவில் புதிய கட்டிடக் குறியீடு அமலுக்கு வந்துள்ளது. கட்டுமானத் துறையில் உள்ள பொறியியல் அலுவலகங்கள் புதிய விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கம் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் ஒரு பகுதியாக புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய கட்டுமானத் திட்டங்களுக்கான திட்டங்கள் மற்றும் வடிவமைப்புகளைத் தயாரிக்கும் போது, ​​நிலநடுக்கத்தைத் தடுப்பது தொடர்பான விதிகளை கட்டாயமாக கடைப்பிடிக்குமாறு, சவூதியின் பொறியியல் அலுவலகங்களை நகராட்சிகள் கேட்டுக் கொண்டுள்ளன பொறியியல் நிறுவனங்கள் கட்டிடங்களையும்…

மேலும்...

2023 ஃபிஃபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் சவூதி அரேபியா!

ரியாத் (15 பிப் 2023): சவூதி அரேபியாவில் ஃபிஃபா கிளப் உலகக் கோப்பை இந்த ஆண்டு டிசம்பர் 12 முதல் 22 வரை நடைபெறும் என்று சவுதி அரேபிய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த போட்டிகள் கடைசியாக மொராக்கோவிலும், 2020 மற்றும் 2021 இல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது. இது தவிர பிரேசில், ஜப்பான் மற்றும் கத்தார் ஆகியவை முந்தைய ஆண்டுகளில் இந்த போட்டியை நடத்தியுள்ளன. சவூதி தேசிய அணிகள் ஐந்து முறை இந்த போட்டிகளில்…

மேலும்...

சவூதி அரேபியாவில் தமிழர் மரணம்!

அபஹா (14 பிப் 2023): சவூதி அரேபியா அபஹாவில் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். திருச்சிராப்பள்ளி அரியலூரைச் சேர்ந்த எட்டு வருடங்களாக சவூதியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். விடுமுறை முடிந்து நாட்டிலிருந்து திரும்பி வந்து மூன்றரை வருடங்கள் ஆகின்றன. இந்நிலையில் அவர் பணிபுரியும் நிறுவனத்தின் இல்லத்தில் மாரடைப்பால் இறந்தார். அபாஹா அசீர் மருத்துவமனை பிணவறையில் உள்ள சடலம் குடும்பத்தினரின் வேண்டுகோளின்படி மேலதிக நடைமுறைகள் முடிந்தபின் வீட்டிற்கு அனுப்பப்படும் என்று ஜித்தா துணைத் தூதரக உறுப்பினர்…

மேலும்...

சவூதி அரேபியாவில் மழை மற்றும் காற்று வீச வாய்ப்பு!

ரியாத் (12 பிப் 2023): சவுதி அரேபியாவின் பல்வேறு மாகாணங்களில் வெள்ளிக்கிழமை வரை வானிலையில் மாற்றம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தபூக், வடக்கு எல்லை, அல்-ஜவ்ஃப், அல்-காசிம், ரியாத், மதீனா மற்றும் கிழக்கு மாகாணத்தில் திங்கள் முதல் புதன்கிழமை வரை லேசான மழை பெய்யும். ரியாத் மாகாணம் மற்றும் மக்கா, மதீனா, அல்-ஜவ்ஃப், தபூக், வடக்கு எல்லை, ஹைல், அல்-காசிம் மற்றும் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் செவ்வாய் முதல் வெள்ளி வரை…

மேலும்...