விவசாயிகள் போராட்டத்திற்குள் நுழைந்த சிந்துவுக்கு மோடி அமித்ஷாவுடன் தொடர்பு – அம்பலப்படுத்திய பிரசாந்த் பூஷன்!

Share this News:

புதுடெல்லி (27 ஜன 2021): விவசாயிகளின் டிராக்டர் பேரணியின் போது செங்கோட்டையில் சீக்கியர்களின் கொடி ஏற்றி வன்முறைக்கு காரணமான பஞ்சாபி நடிகர் தீப் சித்துவுடன் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா இருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய குடியரசு தினமான நேற்று விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பஞ்சாபி நடிகர் தீப் சித்து செங்கோட்டையில் சீக்கிய கொடியை ஏற்றியதாக சர்ச்சை ஏற்பட்டது. ஆனால் இதில் விவசாயிகளுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என விவசாயிகள் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் தீப் சித்து மோடி மற்றும் அமித் ஷா ஆகியோருடன் இருந்தவர் என்றும், போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக தனியாக கூட்டத்தை கூட்டி செங்கோட்டைக்கு மக்களை அழைத்து வந்து சீக்கியக் கொடியை ஏற்றியவர் என்று வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ட்வீட் செய்துள்ளார்.

மேலும் விவசாயிகள் அமைப்புகள் போராட்டத்தில் வெளியாட்கள் ஊடுருவியுள்ளதாகவும், அவர்கள்தான் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார் . பின்னர், தீப் சித்து போராட்டத்தில் ஈடுபட்டது மற்றும் அவருக்கு பாஜகவுக்கு உள்ள தொடர்பு ஆகியவை சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. .


Share this News:

Leave a Reply