கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி – கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதி!

Share this News:

கொல்கத்தா (27 ஜன 2021): பிசிசிஐ தலைவரும் முன்னாள் இந்திய அணி கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தா மருத்துவமனையில் புதன் கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு அவருக்கு உடல் நிலை அசவுகரியம் ஏற்பட்டுள்ளது. இன்று மதியம் லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் கொல்கத்தா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் மாரடைப்பு காரணமாக சவுரவ் கங்குலி கொல்கத்தா உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆஞ்சியோ பிளாஸ்டி மூலம் ஸ்டென்ட் வைக்கப்பட்டு நலமாக வீடு திரும்பினார். அப்போது அவரது இருதயத்துக்கு ரத்தம் செல்லும் குழாய்களில் 3 அடைப்பு இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மீண்டும் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply