அமைச்சர் உட்பட ஒரேநாளில் 778 பேருக்‍கு கொரோனா பாதிப்பு!

Share this News:

மும்பை (24 ஏப் 2020): மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 778 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்‍கப்பட்டுள்ள மாநிலங்களின் பட்டியலில் மஹாராஷ்ட்ரா முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக அம்மாநிலத் தலைநகர் மும்பையின் நிலை மோசமாகி வருகிறது. மஹாராஷ்ட்ராவின் மொத்த கொரோனா நோயாளிகளில் பாதிக்கும் அதிகமானோர் மும்பையில் உள்ளனர்.

அம்மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 778 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 427 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, மஹாராஷட்ர மாநில வீட்டு வசதித்துறை அமைச்சர் திரு. ஜிதேந்திரா அவஹாத்துக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 54 வயதாகும் அவருக்‍கு, மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து, மும்பாராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.


Share this News:

Leave a Reply