அர்னாப் கோஸ்வாமி மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தடை!

Share this News:

புதுடெல்லி (24 ஏப் 2020): தனியார் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ய உச்ச நீதிமன்றம் மூன்று வாரகால இடைக்கால தடை விதித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் பால்கரில், சாமியார்கள் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் திருமதி சோனியா காந்தியை அவதூறாக பேசியதாக, தனியார் தொலைக்காட்சி ஆசிரியர் திரு. அர்னாப் கோஸ்வாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தாக்கியதாக, திரு. அர்னாப் கோஸ்வாமியும் புகாரளித்தார்.

இந்நிலையில், இது தொடர்பான வழக்குகள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் திரு. டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தன. இதை விசாரித்த நீதிபதிகள், திரு. அர்னாப் கோஸ்வாமியை 3 வாரங்களுக்கு கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இந்த தடைக் காலத்தில், திரு. அர்னாப் கோஸ்வாமி மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும், அவர் முன்ஜாமின் மனு தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில், Maharashtra, Chhattisgarh, Rajasthan, Punjab ஆகிய மாநில அரசுகள் மற்றும் எதிர் மனுதாரர்கள் பதிலளிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், திரு. அர்னாப் கோஸ்வாமிக்கும், அவரது தொலைக்காட்சிக்கும் உரிய பாதுகாப்பு வழங்க மும்பை போலீசாருக்கு உத்தரவிட்டனர்.


Share this News:

Leave a Reply