தமிழகத்துக்கு இது மிகப்பெரிய ஆறுதல்!

Share this News:

சென்னை (24 ஏப் 2020): தமிழகத்தில் கொரோனாவிலிருந்து நிவாரணம் பெற்று வீடு திரும்புபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவும் வேகம் அதிகரித்துள்ளது. அதேசமயம் நோய்த்தொற்று ஏற்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோரில் பலர் குணமடைந்து வீடு திரும்புவது ஆறுதல் அளிக்கிறது.

தமிழகத்திலும் நோய்த்தொற்று ஏற்பட்டவர்களில் பலர் குணமடைந்துள்ளனர். கடந்த சில தினங்களாக குணமடைந்தோர் விகிதம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 1683 என்ற நிலையில் இருந்தது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 752 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 90 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 908 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் உயிர்காக்கும் அவசர சிகிச்சை தேவைப்படும் கொரோனா நோயாளிகளுக்கு மொத்தம் 3371 வென்டிலேட்டர்கள் உள்ளன. தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் 29 ஆயிரத்து 74 உள்ளன.

நாடு முழுவதும் மொத்தம் 23,077 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 4749 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 718 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply