உ.பி.யில் கொடூரம் – 19 வயது தலித் பெண் வன்புணர்ந்து கொலை!

Share this News:

புதுடெல்லி (29 செப் 2020): உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 19 வயது இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் பகுதியில், சண்ட்பா கிராமத்தை சேர்ந்த 19 வயது தலித் பெண், கடந்த 14-ம் தேதி, அதே கிராமத்தை கிராமத்தை சேர்ந்த 4 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

நாக்கு துண்டிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில், அலிகாரில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று மேல் சிகிச்சைக்காக நேற்று டெல்லி கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி, இன்று அவர் உயிரிழந்தார்.

இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 4 பேரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படுமென ஹாத்ரஸ் எஸ்.பி. தெரிவித்துள்ளார். இந்த கொடூர சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் திருமதி.பிரியங்கா காந்தி, செல்வி.மாயாவதி, திரு.அகிலேஷ் யாதவ் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமடைந்து, பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகள் வெளிப்படையாகவே குற்றங்களை செய்வதாகவும், எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.


Share this News:

Leave a Reply