டிசம்பர் 6 தலித் இஸ்லாமியர் எழுச்சி நாள் – திருமாவளவன் அறிக்கை!

சென்னை (06 டிச 2022): டிசம்பர் 6 ஐ தலித் இஸ்லாமிய எழுச்சி நாளான இன்று சகோதரத்துவத்துவத்தை வளர்த்தெடுக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி அழைப்பு விடுத்துள்ளது, இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: *திசம்பர் -06, புரட்சியாளர் அம்பேத்கர் நினைவுநாளில்*, அவர் புதிய இந்தியாவைக் கட்டமைத்திட ஆற்றியுள்ள அவரது அளப்பரிய பங்களிப்பை நினைவுகூர்ந்து அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். அத்துடன், சனாதன சங்பரிவார்களால் பாபர் மசூதி…

மேலும்...

தலித் மாணவர்களை வைத்து கழிவறையை சுத்தம் செய்த தலைமை ஆசிரியை மீது வழக்கு!

ஈரோடு (03 டிச 2022): ஈரோட்டில் தலித் மாணவர்களை வைத்து பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்த தலைமை ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் உள்ள அரசுப் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படிக்கும் 6 மாணவர்களுடன் தலைமையாசிரியை கழிவறையை சுத்தம் செய்துள்ளார். மாணவி ஒருவரின் தாயார் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் தலைமை ஆசிரியை கீதா ராணி தலைமறைவாக உள்ளார். புகாரின்படி, கழிவறையை சுத்தம் செய்ய தலித் மாணவர்களை…

மேலும்...

தலித் வீட்டில் முதல்வர் திடீர் விசிட் – பிராண்டட் டீதான் வேண்டும்- பகீர் கிளப்பும் வீடியோ!

பெங்களூரு (14 அக் 2022): தலித் சமூகத்தை சேர்ந்தவர் வீட்டில் பிராண்டட் டீதான் வேண்டும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கேட்கும் வீடியோ ஒன்றை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக முதல்வர் பொம்மை, முன்னாள் முதலர் எடியூரப்பா, சுற்றுலாத்துறை அமைச்சர் ஆனந்த் சிங், நீர்வளத்துறை அமைச்சர் கோவிந்த் கர்ஜோல் மற்றும் பாஜக தலைவர்கள் விஜயநகர மாவட்டம் கமலாபுராவில் உள்ள ஒரு வீட்டில் புதன்கிழமை காலை சென்றனர். அங்கு காலை உணவையும் சாப்பிட்டனர். பின்னர்,…

மேலும்...

ஜாதியை சுட்டிக்காட்டி இளையராஜாவை அவமானப்படுத்திய பாஜக!

புதுடெல்லி (07 ஜூலை 2022): இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்கப்படுவதாக குடியரசுத்தலைவர் அறிவித்துள்ள நிலையில் இது குறித்த அறிவிப்பில் இளையராஜாவை ‘தலித்’ என குறிப்பிட்டு பாஜக அரசு இளையராஜாவை அவமானப்படுத்தியுள்ளது. இளையராஜாவுக்கு எம்பி பதவி வழங்கப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின்,பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் அதேவேளை சமீபத்தில் பிரதமர் மோடியை டாக்டர் அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா ஒரு புத்தகத்தில் எழுதியிருந்தார். இதற்கான பரிசுதான் எம்பி பதவி என நெட்டிசங்கள் கருத்து தெரிவித்து…

மேலும்...

தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் உயர் ஜாதியினரால் அடித்துக் கொலை!

ஃபிரோசாபாத் (26 ஏப் 2022): உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் மாவட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கால்நடைகளுக்கு தீவனம் கொடுத்துக் கொண்டிருந்தபோது, ​​உயர் சாதியைச் சேர்ந்த சிலர் தாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த ஜெய் சிங் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அகிலேஷ் நரேன் கூறுகையில், இந்த சம்பவ தொடர்பாக 6 பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்”…

மேலும்...

ஹிஜாப் சர்ச்சை – முஸ்லீம் மாணவிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய தலித் மாணவர்கள்!

உடுப்பி (07 பிப் 2022): கர்நாடகாவில் முஸ்லீம் மாணவிகளுக்கு ஆதரவாக தலித் மாணவர்கள் ஊதா துண்டு அணிந்து கொண்டு கல்லூரி வளாகத்திற்குள் வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் பாஜக அரசை பல தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் ஹிஜாபுக்கு எதிராக ஆர் எஸ் எஸ், பாஜக மாணவர் அமைப்பினர் காவி துண்டு அணிந்து கல்லூரிக்குள் நுழைந்தனர். இதனை கண்டிக்கும் வகையிலும் முஸ்லீம் மாணவிகளுக்கு…

மேலும்...

தலித் இளைஞர் முஸ்லீம் பெண் படுகொலை – கவுரவக் கொலையா?

பெங்களூரு (26 ஜூன் 2021): தலித் இளைஞரும் முஸ்லீம் பெண்ணும் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் விஜயவாடா மாவட்டத்தில் சலடஹில் என்ற கிராமம் உள்ளது.. இங்கு பசவராஜ் மடிவலபா படிகர் என்ற தலித் இளைஞர் வசித்து வந்தார்.. இவருக்கு 18 வயதாகிறது. அதே கிராமத்தை சேர்ந்த டவால்பி பந்தகிசாப் என்ற இஸ்லாமிய பெண்ணும் வசித்து வந்தார். இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இருவரும் நேற்று முன் தினம் வயல் வெளி…

மேலும்...

ஹத்ராஸ் தலித் சிறுமி வன்புணர்வு வழக்கில் திடீர் திருப்பம்!

லக்னோ (18 டிச 2020): உத்தரபிரதேசம் ஹத்ராஸில் இளம் பெண் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லபட்டதை சிபிஐ உறுதி செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் அடிப்படையில் மத்திய புலனாய்வுப் பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஹத்ராஸில் ஒரு தலித் சிறுமி நான்கு இளைஞர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) கண்டறிந்துள்ளது. கற்பழிப்பு மற்றும் கொலை குற்றச்சாட்டில் ஹத்ராஸில் உள்ள நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை…

மேலும்...

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி பலியான பெண் மீது அவதூறு பரப்பும் பாஜகவினர்!

லக்னோ(08 அக் 2020):உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயதான பட்டியலினப் பெண் ஒருவர் ஆதிக்க சாதியை சேர்ந்த 4 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வந்த அப்பெண் பரிதாபமாக சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக, ரவி, ராம்குமார், சந்தீப், லாவ் குஷ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உத்தரப்பிரதேச மாநில காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். மேலும், குற்றவாளிகள் மீது…

மேலும்...

உ.பி.யில் கொடூரம் – 19 வயது தலித் பெண் வன்புணர்ந்து கொலை!

புதுடெல்லி (29 செப் 2020): உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 19 வயது இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். உத்தரப்பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் பகுதியில், சண்ட்பா கிராமத்தை சேர்ந்த 19 வயது தலித் பெண், கடந்த 14-ம் தேதி, அதே கிராமத்தை கிராமத்தை சேர்ந்த 4 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். நாக்கு துண்டிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில், அலிகாரில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று மேல்…

மேலும்...