சிறையில் பிரபல நடிகைகள் கதறல்

Share this News:

பெங்களூரு (29 செப் 2020): போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நடிகைகள் ஜாமீன் கிடைக்காததால் கதறி அழுதுள்ளனர்.

கன்னட திரை உலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறைக்குள் கைதிகளுக்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிதாக கைதாகும் நபர்களை, சிறையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பெண்களுக்கான அறைகளில் தங்க வைப்பதே வழக்கம். அங்கு 14 நாட்கள் தனிமை முடிந்த பின்பு தான் மற்ற கைதிகளுக்கான அறைகளுக்குள் அடைக்கப்படுவார்கள்.

மேலும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் நடத்தப்படும். அதுபோல, நடிகைகள் ராகணி திவேதியின் 14 நாட்கள் தனிமை முடிந்துள்ளது. இதனால் அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்திவிட்டு மற்ற பெண் கைதிகளுக்கான சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. அதுபோல, நடிகை சஞ்சனா கல்ராணியும் இன்னும் 2 நாட்களில் மற்ற பெண் கைதிகளுடன் அடைக்கப்பட உள்ளார்.

இதற்கிடையில், நேற்று தங்களுக்கு ஜாமீன் கிடைக்கும், சிறையில் இருந்து வெளியே வந்து விடலாம் என்று நடிகைகள் 2 பேரும் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்துள்ளனர். ஆனால் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது பற்றி அறிந்ததும் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளனர்.


Share this News:

Leave a Reply