தோனி சச்சினை பின்பற்றாதது வருத்தமே – இன்சமாம் அதிருப்தி!

இஸ்லாமாபாத் (18 ஆக 2020): தோனி ஓய்வு அறிவித்ததற்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள ஒரு நபர் வீட்டில் அமர்ந்து ஓய்வை அறிவிப்பது சரியான முடிவல்ல. சச்சின் ஓய்வு முடிவினை அறிவிக்க இருக்கும் போதும் அவரிடம் இது குறித்து கூறியுள்ளேன். எனவே தோனியும் அவ்வாறு செய்திருந்தால் நான் உட்பட அனைவரும் மிகவும் சந்தோசப்பட்டிருப்போம். இந்தியாவின் சிறந்த கேப்டன் என்றால் அது…

மேலும்...

தோனியை தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்னொரு அதிர்ச்சி!

புதுடெல்லி (15 ஆக 2020): தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறித்த நிலையில் மற்றொரு வீரரான சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். . நீண்ட காலமாக சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்த சுரேஷ் ரெய்னா தற்போது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். இது அவரின் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ரெய்னா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “எனக்கு ஆதரவு அளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி” என்று அவர் தெரிவித்துள்ளார். தோனி…

மேலும்...

சோகத்தில் தோனி ரசிகர்கள்!

புதுடெல்லி (15 ஆக 2020): சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார், முன்னாள் கேப்டன் தோனி. இதுகுறித்த்உ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. இன்று 1929 மணியிலிருந்து நான் ஓய்வு பெற்றதாகக் கருதிக் கொள்ளுங்கள்,” என குறிப்பிட்டுள்ளார். தோனியின் ஓய்வு அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 2004 ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான தோனி, வங்க தேசத்திற்கு எதிரான முதல் போட்டியில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி…

மேலும்...

இம்ரான்கான் மீது ஜாவித் மியான்தத் பாய்ச்சல்!

இஸ்லாமாபாத் (14 ஆக 2020): பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் கிரிக்கெட் குறித்து அறியாதவர்களை அதிகாரிகளாக நியமித்திருப்பதாக இம்ரான் கான் மீது முன்னாள் கேப்டன் ஜாவித் மியாண்தத் குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக மியாண்தத் விளையாடியபோது இம்ரான் கான் ஆல்ரவுண்டராக பாகிஸ்தான் அணிக்காக விளையாடியவர். சக வீரர்களாகவும், நண்பர்களாகவும் இருவரும் இருந்து வந்த நிலையில் தற்போது இம்ரான்கான் பாகிஸ்தானின் பிரதமராக உள்ளார். இந்நிலையில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தில், கிரிக்கெட் பற்றிய எந்த விசயங்களும் அறியாத நபர்களை…

மேலும்...
IPL 2020

2020 ஐபிஎல் போட்டி நடக்கப் போவது எங்கே..?

புதுடெல்லி (21 ஜூலை 2020): “ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்” என்று ஐ.பி.எல். தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், வழக்கமாக மார்ச் மாதம் நடைபெறும் ஐ.பி.எல். தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஐ.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாய்,…

மேலும்...
T20 2020 1

2020 டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் இரத்து செய்தது ஐ.சி.சி.

துபை (21 ஜூலை 2020):கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக அக்டோபர் மாதம் நடைபெறுவதாக இருந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு கைவிடப்படுவதாகவும் அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக், விம்பிள்டன் போன்ற கிரான்ட் ஸ்லாம் உள்ளிட்ட பல முக்கிய சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் வைரஸ் பாதிப்பு எப்போது முடிவுக்கும் வரும் என்பது…

மேலும்...

இலங்கை கிரிக்கெட் வீரர் கைது

கொழும்பு (05 ஜூலை 2020) : இலங்கையின் முன்னணி கிரிக்கெட் வீரர் குஷால் மெண்டிஸ் கைது செய்யப்பட்டுள்ளார் இலங்கையில் பனாதூரா என்ற பகுதியில் காரை ஓட்டிச் சென்ற குஸால் மெண்டிஸ், ஒரு முதியவர் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார் இதனையடுத்து இவரை கைது செய்த காவல்துறையினர் இன்று நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்கின்றனர் .

மேலும்...

மூன்று கிரிக்கெட் வீரர்கள் கொரோனாவால் பாதிப்பு!

இஸ்லாமாபாத் (23 ஜூன் 2020): பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மூன்று பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் விளையாட உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்னர் பாகிஸ்தான் வீரர்கள் ராவல்பிண்டியில் கொரோனா பரிசோதனை செய்துகொண்டர். பரிசோதனை முடிவில் அந்த அணியின் ஹைதர் அலி (பேட்ஸ்மேன்), ஹரிஸ் ரஃப் (பந்து வீச்சாளர்), ஷதிப் கான் (பந்து வீச்சாளர்) ஆகிய மூன்று வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது…

மேலும்...

சூதாட்டத்தின் மூலமே இந்தியா உலகக் கோப்பையை வென்றது- இலங்கை முன்னாள் அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு!

கொழும்பு (18 ஜூன் 2020): 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்தியா (பிசிசிஐ) சூதட்டம் மூலமே இலங்கையை வென்றது என்று இலங்கையின் முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் மஹிந்தானந்தா அலுத்கமகே தெரிவித்துள்ளார். மும்பையில், 2011ல் நடந்த ஐ.சி.சி., உலக கோப்பை பைனலில் இந்திய அணி இலங்கை அணியை வென்று கோப்பையை கைபற்றியது. இந்நிலையில் இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கையின் முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் மஹிந்தானந்தா அலுத்கமகே, 2011…

மேலும்...

மிகவும் கஷ்டப்பட்டேன் – நீங்கள் பாதுகாப்பாக இருங்கள்: ரசிகர்களுக்கு ஷாஹித் அஃப்ரிடி கோரிக்கை!

இஸ்லாமாபாத் (18 ஜூன் 2020): “கொரோனா வைரஸின் தாக்கத்தால் மூன்று நாட்கள் மிகவும் கடினமாக உணர்ந்தேன். தயவு செய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.” என்று பாகிஸ்தான் அதிரடி வீரர் ஷாஹித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள ஷாஹித் அஃப்ரிடி மீது பரவிய வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் உணவின்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ என் குழுவுடன் உதவி செய்து வந்தபோதே என்னையும் கொரோனா தாக்கும் என்று…

மேலும்...