ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அசருத்தீன் சச்சின்!

பெங்களூரு (18 பிப் 2021): பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் கேரள இளம் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். அதேபோல் மற்றொரு கேரள வீரர் சச்சின் பேபியும் பெங்களூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார. சையத் முஷ்டாக் அலி டிராபியில் சிறந்து விளங்கிய முகமது அசாருதீன் 37 பந்துகளில் சதம் அடித்தது ஐபிஎல் போட்டியில் தேர்வாவதவதற்கு வழிவகுத்தது. வரும் ஐபிஎல் போட்டிக்கு ரூ .16.25 கோடிக்கு கிறிஸ் மோரிஸ் அதிக தொகைக்கு ஏலம் போயுள்ளார்.

மேலும்...

கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி – கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதி!

கொல்கத்தா (27 ஜன 2021): பிசிசிஐ தலைவரும் முன்னாள் இந்திய அணி கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தா மருத்துவமனையில் புதன் கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு அவருக்கு உடல் நிலை அசவுகரியம் ஏற்பட்டுள்ளது. இன்று மதியம் லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் கொல்கத்தா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் மாரடைப்பு காரணமாக சவுரவ் கங்குலி கொல்கத்தா உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆஞ்சியோ பிளாஸ்டி மூலம்…

மேலும்...

கிரிக்கெட் வீரர்கள் முஹம்மது சிராஜ், பும்ரா மீது இனவெறி சீண்டல்!

சிட்னி (10 ஜன 2020): இந்திய கிரிக்கெட் வீரர்கள் முஹம்மது சிராஜ், பும்ரா மீது கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் இனரீதியாக மேற்கொண்ட சீண்டல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா (பிசிசிஐ) -ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில், 3வது நாளான நேற்றைய ஆட்டத்தில், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகிய இருவரையும் சிட்னி மைதானத்தில் பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த ரசிகர்கள் இனரீதியாக இழிவுப்படுத்தியுள்ளனர். இந்நிலையில்…

மேலும்...

கங்குலிக்கு மாரடைப்பு ஏற்பட அரசியல் நெருக்கடியே கரணம் – கம்யூனிஸ்ட் தலைவர் குற்றச்சாட்டு!

கொல்கத்தா (04 ஜன 2021): பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியை அரசியலில் சேரக் கோரி கடும்நெருக்கடியும், அழுத்தமும் கொடுக்கப்பட்டதால் மாரடைப்பு வந்திருக்கலாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் அசோக் பட்டாச்சார்யா குற்றம் சாட்டியுள்ளார். பிசிசிஐ கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு சனிக்கிழமை காலை லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள உட்லாண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு மூன்று அடைப்புகள் இருப்பது தெரியவந்தது, இதனையடுத்து அவருக்கு…

மேலும்...

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலிக்கு திடீர் மாரடைப்பு!

கொல்கத்தா (03 ஜன 2020): இந்திய (பிசிசிஐ) கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கங்குலி நேற்று காலை திடீரென மயங்கி விழுந்ததை அடுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் மாரடைப்பு காரணமாக கங்குலி மயங்கி விழுந்தது தெரிய வந்தது. ரத்தக் குழாயில் 3 இடங்களில் உள்ள அடைப்பு காரணமாக ஏற்பட்ட லேசான மாரடைப்பு என்பதால் பிரச்னையில்லை என்றும்…

மேலும்...

யார் இந்த முஹம்மது சிராஜ்? – ஆட்டோ ஓட்டுனரின் மகன் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்ற கதை!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய (பிசிசிஐ) இடம் பெற்றுள்ளவர் முஹம்மது சிராஜ் . மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் முதலாவதாக அவர் பங்கேற்றுள்ளார். ஆனால் அவரது முதல் போட்டியைக் காண அவரது தந்தை உயிரோடு இல்லை. ஹைதராபாத்தில் ஒரு ஆட்டோரிக்ஷா ஓட்டுநரின் மகன், சிராஜ். ஏழாம் வகுப்பில் இருந்தபோது, ​​பள்ளிக்கு இடையேயான போட்டிகளில் வென்ற அணி யில் சிராஜின் பங்கு மிக முக்கியமானது. , ஆரம்பம் முதலே சிராஜ் டென்னிஸ் பந்தில் விளையாடுவதை தவிர்ப்பார். அவரது வேகமும்,…

மேலும்...

முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவுக்கு மாரடைப்பு நோய்!

பிசிசிஐ அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவுக்கு (வயது 61) திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்டார். அங்கு அவருக்கு ஆன்ஜியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு அவரது உடல்நிலை சீராக உள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து கபில்தேவின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவர் மருத்துவமனையில் நலமுடன் இருப்பதாக கையை உயர்த்திக்காட்டி புன்னகைக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும்...

புகழ் பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் மும்பையில் திடீர் மரணம்

மும்பை (24 செப் 2020): ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் மும்பையில் உயிரிழந்தார். ஜோன்ஸ் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2020 க்கான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வர்ணனைக் குழுவில் இடம்பெற்று இருந்தார்.மேலும் மும்பையில் உள்ள ஏழு நட்சத்தி ஓட்டலில் தங்கி இருந்தார்.அங்கு அவர் மாரடைப்பால் காலமானார். ஜோன்ஸ் 1984 மற்றும் 1994 க்கு இடையில் ஆஸ்திரேலியாவுக்காக 52 டெஸ்ட் மற்றும் 164 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

மேலும்...

ஐபிஎஸ் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா திடீர் நீக்கம்!

துபாய் (29 ஆக 2020): ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎஸ் கிரிக்கெட்டிலிருந்து சென்னை வீரர் சுரேஷ் ரெய்னா நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 13வது ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் 19-ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து அணிவீரர்களும் பயிற்சிக்காக அமீரகத்தில் தற்போது முகாமிட்டுள்ளனர். அந்த வகையில் சென்னை அணியும் சமீபத்தில் அமீரகம் சென்றடைந்தது. தொடருக்கான பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டிருந்த சூழலில், சென்னை அணியைச் சேர்ந்த தீபக் சஹர், அணி ஊழியர்கள்…

மேலும்...

ஐபிஎல் கிரிக்கெட் விளையாட துபாய் சென்ற சென்னை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு!

துபாய் (28 ஆக 2020): ஐபிஎல் கிரிக்கெட் விளையாட துபாய் சென்ற சென்னை வீரர் ஒருவர் உட்பட 13 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2020 ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. அதற்காக எட்டு ஐபிஎல் அணிகளும் இந்தியாவில் இருந்து கிளம்பி துபாய் மற்றும் அபுதாபியில் முகாமிட்டுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் துபாயில் ஒரு ஹோட்டலில் முகாமிட்டுள்ளது. இந்நிலையில் அதிர்ச்சி தரும் செய்தியாக சென்னை வீரர்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது….

மேலும்...