தோனியை தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்னொரு அதிர்ச்சி!

Share this News:

புதுடெல்லி (15 ஆக 2020): தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறித்த நிலையில் மற்றொரு வீரரான சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

. நீண்ட காலமாக சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்த சுரேஷ் ரெய்னா தற்போது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். இது அவரின் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ரெய்னா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “எனக்கு ஆதரவு அளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தோனி ஓய்வு அறிவித்த சில நிமிடங்களில் ரெய்னாவும் ஓய்வு முடிவை அறிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது.

தோனி, ரெய்னா இருவருமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறமை குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply