இம்ரான்கான் மீது ஜாவித் மியான்தத் பாய்ச்சல்!

Share this News:

இஸ்லாமாபாத் (14 ஆக 2020): பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் கிரிக்கெட் குறித்து அறியாதவர்களை அதிகாரிகளாக நியமித்திருப்பதாக இம்ரான் கான் மீது முன்னாள் கேப்டன் ஜாவித் மியாண்தத் குற்றம் சாட்டியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக மியாண்தத் விளையாடியபோது இம்ரான் கான் ஆல்ரவுண்டராக பாகிஸ்தான் அணிக்காக விளையாடியவர்.

சக வீரர்களாகவும், நண்பர்களாகவும் இருவரும் இருந்து வந்த நிலையில் தற்போது இம்ரான்கான் பாகிஸ்தானின் பிரதமராக உள்ளார். இந்நிலையில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தில், கிரிக்கெட் பற்றிய எந்த விசயங்களும் அறியாத நபர்களை அதிகாரிகளாக நியமித்து உள்ளார் என மியாண்தத் சரமாரி குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

இதுகுறித்து மியான்தத் தெரிவிக்கையில், ” பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அனைத்து அதிகாரிகளுக்கும் அந்த விளையாட்டை பற்றிய ஏ.பி.சி. (ஆங்கில மொழியின் அடிப்படை எழுத்துகள்) கூட தெரியாது. இந்த வருத்தத்திற்குரிய விசயம் பற்றி இம்ரான் கானிடம் நான் பேசுவேன். அவர்களை மாற்ற நான் முயற்சிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் “இம்ரான்கான் தன்னை பெரிய அறிவாளியாக சித்தரித்துக் கொண்டுள்ளார்” என்றும் இம்ரான்கானை ஜாவித் மியாண்தத் விமர்சித்துள்ளார்.

பாகிஸ்தானுக்காக 124 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 233 ஒரு நாள் போட்டிகள் விளையாடி முறையே 8,832 மற்றும் 7,381 ரன்களை ஜாவித் மியாண்டட் எடுத்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply