இந்திய பெண்கள் ஹாக்கி அணிக்காக பெருமை கொள்வோம்!

புதுடெல்லி (06 ஆக 2021): டோக்கியோ ஒலிம்பிக்கில் வெற்றி பெற முடியாவிட்டாலும், இந்திய பெண்கள் பெருமையுடன் ஹாக்கி மைதானத்தை விட்டு வெளியேறுகிறார்கள். டோக்கியோ ஒலிம்பிக்கில் அரையிறுதி வரை சென்ற இந்திய பெண்கள் ஹாக்கி அணி, வெண்கலப் பதக்கப் போட்டியில், பிரிட்டனிடம் 4-3 என்ற கணக்கில் தோற்றனர். அரையிறுதி வரை சென்ற இந்திய ஹாக்கி பெண்கள் அணிக்கு இந்தியர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய பிரதமர் மோடியும் ஹாக்கி அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். We will…

மேலும்...

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம்!

டோக்கியோ (04 ஆக 2021): டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் குத்துசண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். பெண்கள் குத்துசண்டை 69 கிலோ – இந்தியாவின் லவ்லினா போர்கோஹெய்ன் அரை யிறுதிக்கு தகுதி பெற்று இருந்தார். முதல்நிலை வீராங்கனையான துருக்கி நாட்டின் சுர்மெனெலியுடன் அரையிறுதிப் போட்டியில் லவ்லினா மோதினார். முதல் சுற்றில் தாக்குதல் ஆட்டத்தை தொடங்கிய சுர்மெலிக்கு 5 நடுவர்களும் 10 புள்ளிகள் அளித்தனர்.இரண்டாவது சுற்றிலும் அவரது செல்வாக்குத் தொடர்ந்தது. காலிறுதிப் போட்டியில், லவ்லினா 4-1 என்ற…

மேலும்...

தங்க மனசா? தங்கப்பதக்கமா? – டோக்கியோ ஒலிம்பிக்கில் கத்தார் வீரர் செய்த மறக்கமுடியாத நிகழ்வு!

டோக்கியோ (02 ஆக 2021): டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற சம்பவம்தான் உலகமெங்கும் பேசுபொருள் ஆகியுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் போட்டியில், கத்தாரின் முதாஜ் எஸ்ஸா பார்ஷிம் என்பவரும் இத்தாலியின் டம்பேரி என்பவரும் தங்கப் பதக்கத்திற்காக கடுமையாகப் போராடினார்கள். இருவருமே 2.37 மீ உயரம் தாண்ட, எஞ்சியவர்களால் முடியாமல் போனது. அதன் பின் இருவருக்கும் 2.37 மீ விட உயரமாக வைத்து இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க முயற்சி செய்தது ஒலிம்பிக் கமிட்டி. மூன்று…

மேலும்...

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம்!

டோக்கியோ (01 ஆக 2021): டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை பி.வி சிந்து. வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த இரண்டாவது பதக்கமாகும். டோக்கியோவில் தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில், மீராபாய் சானு வெள்ளி பதக்கத்தை வென்றிருந்த நிலையில், இந்திய வீராங்கனை பி.வி சிந்து. இன்றைய ஆட்டத்தில் சீன வீராங்கனை ஹி பிங்ஜியாவோவை வீழ்த்தியதன் மூலம் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற நிலையில் பி.வி.சிந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றதால்…

மேலும்...

ஒலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தது கத்தார்!

டோக்கியோ (31 ஜுலை 2021): டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கத்தினை வென்று கத்தார் வரலாற்று சாதனை படைத்துள்ளது. கத்தார் நாட்டுப் பிரஜையான ஃபாரிஸ் இப்ராகிம், கத்தார் நாட்டின் முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அத்துடன் ஃபாரிஸ், 96 கிலோ எடைப் பிரிவில் வென்று ஒலிம்பிக் சாதனையையும் படைத்துள்ளார். ஃபாரிஸ் மொத்தம் 402 கிலோ தூக்கி சாதனை படைத்து கத்தாருக்கு பெருமை சேர்த்துள்ளார். இதற்கு முன் 2016 ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் முடாஸ் பார்ஷிம் என்பவர்…

மேலும்...

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம்?

டோக்கியோ (26 ஜூலை 2021): டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், கடந்த 23 ஆம் தேதி கோலாகலமான துவக்க விழாவுடன் தொடங்கிய நிலையில், மகளிருக்கான 49 கிலோ எடைப்பிரிவு பளு தூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு, வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார். ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற முதல் இந்திய பளுதூக்கும் வீரர் என்ற பெரும் சாதனையை நிகழ்த்தினார். சீனாவைச் சேர்ந்த ஜிஹுய் ஹூ தங்கம் வென்றார்….

மேலும்...

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்!

டோக்கியோ (24 ஜூலை 2021): டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. பெண்கள் 49 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார் மீராபாய் சானு மூலம், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும். மீராபாய் சானு மணிப்பூரைச் சேர்ந்த வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

வைரலாகும் டென்னிஸ் பிரபலத்தின் டேட்டிங் புகைபப்டங்கள்!

மும்பை (14 ஜூலை 2021): பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் பாலிவுட் நடிகை கிம் ஷர்மாவுடன் டேட்டிங் செய்யும் படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. லியாண்டர் பயஸுடன் கிம் சர்மாவுக்கு காதல் இருப்பதாக ஏற்கனவே வதந்தி பரவி வரும் நிலையில் இருவரும் கோவாவில் ஒன்றாக விடுமுறையை செலவழிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. விளையாட்டு வீரர்கள் பாலிவுட் பிரபலங்களுடன் டேட்டிங் செய்வது புதிதல்ல என்கிற போதிலும் ஏற்கனவே கடந்த மாதம், மும்பையில் இருவரும் ஒன்றாக எடுத்த…

மேலும்...

நாங்களெல்லாம் அப்படியில்லை – இப்போதைய கிரிக்கெட் வீரர்களை வறுத்தெடுக்கும் கபில்தேவ்!

மும்பை (01 ஜூலை 2021): இப்போதைய கிரிக்கெட் வீரர்கள் குறித்து முன்னாள் கேப்டன் கபில்தேவ் கடுமையாக விமர்சித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பிசிசிஐ அணி தோற்றது, பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இந்நிலையில், இந்திய பவுலர்கள் பவுலிங் திறன் குறித்து முன்னாள் கேப்டன் கபில் தேவ் வேதனையுடன் விமர்சித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “”நான் நினைப்பது என்னவென்றால், நீங்கள் ஒரு வருடத்தில் 10 மாதம் கிரிக்கெட் விளையாடும்போது, நீங்கள் அதிக காயங்களுக்கு ஆளாக நேரிடும். இன்றைய…

மேலும்...

சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாசிட்டிவ் – ரசிகர்கள் கவலை!

மும்பை (27 மார்ச் 2021): கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தெண்டுல்கர் கூறியதாவது:- சிறிய அறிகுறிகளுடன் கொரோனா இருப்பதால் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி நான் வீட்டில் தனிமையில் உள்ளேன். எனது குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்ததில் யாருக்கும் கொரோனா இல்லை. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் முன்னெச்சரிக்கையாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டு…

மேலும்...