கர்நாடக உள்ளாட்சித் தேர்தலில் எஸ்டிபிஐ 200 க்கும் அதிகமான இடங்களை வென்று சாதனை!

பெங்களூரு (31 டிச 2020): கர்நாடகாவில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ 200 க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் வெற்றி பெற்றுள்ளது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, எஸ்.டி.பி.ஐ இதுவரை 223 இடங்களை வென்றுள்ளது. மங்களூர் மாவட்டத்தில் எஸ்டிபிஐ அதிக இடங்களை கைபற்றியுள்ளது. மடிகேரி (குடக்) – 10, உத்தரா கன்னடம் – 5, குல்பர்கா – 5, உடுப்பி – 14, பல்லாரி – 2, ஹாசன் – 4 மாவட்டங்கள். சாமராஜநகர், யாத்கீர், ரைச்சூர்…

மேலும்...

பாஜக எம்.பி. கட்சியிலிருந்து விலகல்!

காந்திநகர் (29 டிச 2020): குஜராத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மன்சுக் பாய் வசவா பாஜகவிலிருந்து விளக்கியுள்ளார். மேலும் எம்பி பதவியிலிருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாகவும் அறிவித்துள்ளார். குஜராத்தின் பருச் நகரைச் சேர்ந்த எம்.பியான . வாசவா, அங்கிருந்து ஆறு முறை . தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். பாஜக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக ராஜினாமா செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. .

மேலும்...

பாஜகவில் நுழைந்த மேலும் இரு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்!

அசாம் (29 டிச 2020): அசாமின் முன்னாள் அமைச்சரும், கோலாகாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான அஜந்தா நியோக், லக்கிபூரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜ்தீப் கோவலா ஆகியோர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளனர். அசாம் பாஜக தலைவர் ரஞ்சித் தாஸ் மற்றும் மாநில நிதி மற்றும் கல்வி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் கலந்து கொண்ட விழாவில் இவர்கள் இருவரும் பாஜகவில் இணைந்தனர். கட்சி விரோத செயல்களுக்காக அஜந்தா நியோகியை டிசம்பர் 25 அன்று காங்கிரஸ்…

மேலும்...

இந்தியாவிற்குள் புகுந்த புதுவகை கொரோனா – 6 பேருக்கு உறுதி!

புதுடெல்லி (29 டிச 2020): இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த ஆறு பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் 25ம் தேதி முதல் டிசம்பர் 23ம் தேதி வரை இங்கிலாந்தில் இந்தியா வந்த பயணிகளை கண்டறிந்து தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டு வருகிறது. இதுவரை 33,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அதில் 114 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இவர்களது சளி மாதிரி உள்ளிட்டவற்றை…

மேலும்...

பொதுமக்கள் முன்னிலையில் இளைஞர் அடித்துக் கொலை – பரபரப்பான சாலையில் அரங்கேறிய கொடூரம்!

காஜியாபாத் (29 டிச 2020): உத்திர பிரதேசம் காஜியாபாத்தின் பரபரப்பான சாலையில் இளைஞர் ஒருவர் இரண்டு நபர்களால் அடித்து கொல்லப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் அஜய் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை இருவர் அடிப்பதை பொதுமக்கள் வீடியோவால் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிந்துள்ளனர். ஆனால் யாரும் தாக்குபவர்களைத் தடுக்கவோ அல்லது பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்றவோ முயற்சிக்கவில்லை. படுகாயம் அடைந்து இரத்த வெள்ளத்தில் மிதந்த அந்த இளைஞரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக்கூட யாரும் முன்வரவில்லை . அஜய்யை மலர் கடை நடத்துவதில்…

மேலும்...

விவசாயிகள் போராட்டம் – அண்ணா ஹசாரே அதிரடி அறிவிப்பு!

புதுடெல்லி (29 டிச 2020): சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். ஹசாரே தலைமையிலான போராட்டம் ஜனவரி முதல் வாரத்தில் டெல்லியில் தொடங்கும். என்று அவரது அறிவிப்பில் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்காவிட்டால், உண்ணாவிரதத்தில் ஈடுபடுவேன் என்று மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு டிசம்பர் 15 அன்று அண்ணா ஹசாரே கடிதம் எழுதினார். மேலும் எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளைப் பின்பற்றினால்…

மேலும்...

அமலாக்கத் துறைஅலுவலகம் முன் பாஜக அலுவலகம் என பேனர் கட்டி அதிரடி காட்டிய சிவசேனா!

மும்பை (28 டிச 2020) : மும்பையில் உள்ள அமலாக்கத்துறை இயக்குநரகம் அலுவலகம் முன் சிவசேனா ‘பாஜக அலுவலகம்’ என்ற பேனரை தொங்கவிட்டு போராட்டம் நடத்தியது. பி.எம்.சி வங்கி மோசடி வழக்கில் சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டதை எதிர்த்து சிவசேனா நடத்திய போராட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தியில் எழுதப்பட்டுள்ள அந்த பேனரில் ‘பாஜக பிரதேச அலுவலகம்’ என்று எழுதப்பட்டிருந்தது. . இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட வர்ஷா…

மேலும்...

தவறாக பயன்படுத்தப்படும் சட்டம் – இயற்றப்பட்ட ஒரே மாதத்தில் 35 முஸ்லீம் இளைஞர்கள் கைது!

லக்னோ (28 டிச 2020): உத்தரபிரதேசத்தில் கட்டாய மதமாற்றம் (லவ் ஜிஹாத்) தடைச் சட்டம் இயற்றப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு. இந்த மாதத்தில் 35 முஸ்லீம் இளைஞர்கள் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய ஊடக பி.டி.ஐ தெரிவித்துள்ளது. நவம்பர் 27 முதல் சட்டம் நடைமுறைக்கு வந்ததில் இருந்து மாநிலத்தில் சுமார் ஒரு டஜன் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்டம் நடைமுறைக்கு வந்த மறுநாள் முதலே மாநிலத்தில் கைதுகள் தொடங்கிவிட்டன. பெண் ஒருவரின் தந்தை தனது…

மேலும்...

கோவிட் மேல் சிகிச்சைக்காக முதல்வர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்!

புதுடெல்லி (28 டிச 2020):: கோவிட் 19 பாதிப்பால் உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், சிறப்பு சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் டெஹ்ராடூன் டூன் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். “ராவத்தின் உடல்நிலை குறித்து நாங்கள் கவலைப்பட ஒன்றுமில்லை” என்று மருத்துவமனையின் முத்த அதிகாரி டாக்டர் நோடல் கூறியுள்ளார் . இதுவரை உத்தரகண்ட் மாநிலத்தில் கோவிட் 19 பாதிப்பால் 89,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,400 பேர் இறந்துள்ளனர்.

மேலும்...

உத்திர பிரதேசத்தை அடுத்து மத்திய பிரதேசத்திலும் முஸ்லிம்களை குறி வைக்கும் சட்டம்!

புதுடெல்லி (27 டிச 2020): உத்தரபிரதேசத்திற்குப் பிறகு, மத்திய பிரதேச அரசு முஸ்லிம்களை குறி வைத்து மதமாற்ற தடை சட்ட மசோதாவை கொண்டு வந்துள்ளது. சர்ச்சைக்குரிய மதமாற்று தடை சட்டம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து உத்தரபிரதேசத்தில், 35 முஸ்லிம் இளைஞர்கள் ஒரு மாதத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத மதமாற்ற தடை சட்டத்தின் கீழ் மாநிலத்தில் டஜன் கணக்கான எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன . சட்டம் நடைமுறைக்கு வந்த மறுநாளே முஸ்லிம்களின் கைதுகள் தொடங்கிவிட்டன. சில சந்தர்ப்பங்களில், ஆதாரங்கள் இல்லா…

மேலும்...