அமலாக்கத் துறைஅலுவலகம் முன் பாஜக அலுவலகம் என பேனர் கட்டி அதிரடி காட்டிய சிவசேனா!

மும்பை (28 டிச 2020) : மும்பையில் உள்ள அமலாக்கத்துறை இயக்குநரகம் அலுவலகம் முன் சிவசேனா ‘பாஜக அலுவலகம்’ என்ற பேனரை தொங்கவிட்டு போராட்டம் நடத்தியது.

பி.எம்.சி வங்கி மோசடி வழக்கில் சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டதை எதிர்த்து சிவசேனா நடத்திய போராட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தியில் எழுதப்பட்டுள்ள அந்த பேனரில் ‘பாஜக பிரதேச அலுவலகம்’ என்று எழுதப்பட்டிருந்தது. .

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட வர்ஷா ராவத் மற்றும் பிரவீன் ராவத் ஆகியோருக்கு இடையிலான நிதி பரிவர்த்தனைகளை ED விசாரித்து வருவதாக சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. .

டிசம்பர் 29 ம் தேதி ED இன் மும்பை அலுவலகத்தில் வர்ஷா ராவத்விசாரணைக்கு ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply