நிதிஷ்குமார் பாஜகவில் இணையப் போகிறாரா? – ஆர்.ஜே.டி தலைவர் கேள்வி!

புதுடெல்லி (27 டிச 2020): நிதிஷ்குமார் தனது கட்சியை பஜாகவுன் இணைக்க திட்டம் எதுவும் வகுத்துள்ளாரா? என்று ஆர்ஜேடி தலைவர் மனோஜ் ஜா கேள்வி எழுப்பியுள்ளார். அருணச்சல பிரதேசத்தில் ஆறு ஜேடியு எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்ததன் மூலம் நிதிஷ்குமார் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். ஒரு எம்.எல்.ஏ மட்டுமே அவரிடம் அங்கு உள்ளது. இந்நிலையில் பீகார் ஆர்ஜேடி தலைவர் மனோஜ் ஜா நிதிஷ்குமாரை கடுமையாக சாடியுள்ளார். @ஏழு எம்.எல்.ஏக்களில் 6 பேர் கட்சியை விட்டு வெளியேறி பாஜகவில் இணைந்துள்ளனர்…

மேலும்...

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் ராணுவ வீரர்கள் 150 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்!

புதுடெல்லி (26 டிச 2020): குடியரசு தினம் மற்றும் அணிவகுப்பில் பங்கேற்கவுள்ள 150 வீரர்களுக்கு கொரோனா சோதனையில் பாசிட்டிவ் எனபது உறுதியாகியுள்ளது. அணிவகுப்புக்கான பயிற்சிக்காக டெல்லி வந்த சில வீரர்களுக்கு , பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக கோவிட் பரிசோதிக்கப்பட்டபோது அவர்களுக்கு கோவிட் பதித்திருப்பது கண்டறியப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. சுமார் ஆயிரம் வீரர்கள் மீது இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பலருக்கு எந்த அறிகுறிகளும் இல்லை. இந்நிலையில் கோவிட் உறுதிப்படுத்தியவர்கள் சிறப்பு கண்காணிப்பு மையத்திற்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள்…

மேலும்...

துன்புறுத்தப்படும் பத்திரிகையாளர்களும் பாஜக ஆட்சியும்!

புதுடெல்லி (26 டிச 2020) பாஜக ஆட்சி புரியும் மாநிலங்களில் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பாக இல்லை என்பதை ‘தி வயர்’ இன்று வெளியிட்டுள்ள விரிவான அறிக்கை காட்டுகிறது. இதுகுறித்த அந்த அறிக்கையின்படி, நாட்டில் கொரோனா காலங்களில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 55 பத்திரிகையாளர்கள் 2020 மார்ச் 25 முதல் மே 31 வரை கைது செய்யப்பட்டனர். பல ஊடக ஊழியர்கள் உடல் ரீதியாக தாக்கப்பட்டனர். சொத்துக்கள் , வாகனங்கள் மற்றும் கேமராக்கள் அழிக்கப்பட்டன. இந்த காலகட்டத்தில், சித்திக் கப்பன்…

மேலும்...

நிதிஷ்குமாருக்கு ஆப்பு வைத்த பாஜக!

பாட்னா (26 டிச 2020): அருணாச்சல பிரதேசத்தில், நிதீஷ் குமாரின் ஜனதா தளம் (ஜே.டி.யு) கட்சியைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். பீகாருக்குப் பிறகு, அருணாச்சல பிரதேசத்தில் நிதீஷ் குமார் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளார். இதன்மூலம் 7 எம்.எல்.ஏக்களை வைத்திருந்த நிதிஷ்குமார் கட்சியில் இப்போது ஒரு எம்.எல்.ஏ மட்டுமே உள்ளார். இதற்கிடையில், அருணாச்சல பிரதேச மக்கள் கட்சியின் உறுப்பினர் உட்பட 48 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் உள்ளனர்.

மேலும்...

அதானி அம்பானி நிறுவனங்களின் விற்பனை கடும் பாதிப்பு – கடுங் குளிரிலும் தொடரும் விவசாயிகள் போராட்டம்!

புதுடெல்லி (25 டிச 2020): டெல்லியில் தொடர்ந்து நடந்து வரும் விவசாயிகள் போராட்டதில் இதுவரை 32 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்களை திருப்திப்படுத்துவதற்காக மத்திய அரசு பேச்சுவார்த்தைகளை முன்வைத்திருந்தாலும், சட்டம் திரும்பப் பெறும் வரை தாங்கள் சமரசம் செய்ய மாட்டோம் என்று விவசாயிகள் திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர். ஆனால் சட்டத்தை திரும்பப் பெறாமல் மத்திய அரசு பிடிவாதமாகவே உள்ளது.

மேலும்...

காஷ்மீர் தேர்தலின் மூலம் ஜனநாயகம் வென்றது: உமர் அப்துல்லா!

ஸ்ரீநகர் (24 டிச 2020): காஷ்மீர் 288 மாவட்ட மேம்பாட்டு கவுன்சில்களுக்கான தேர்தல் முடிவுகள் உண்மையான ஜனநாயக வெற்றியை காட்டுகிறது என்று பாஜகவுக்கு உமர் அப்துல்லா விளக்கம் அளித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் உள்ள 288 மாவட்ட கவுன்சில்களுக்கான (டி.டி.சி) முதல் தேர்தலில் 112 இடங்களை ஃபாரூக் அப்துல்லா தலைமையிலான மக்கள் கூட்டணி (பிஏஜிடி) வென்றுள்ளது. பாஜக 75 இடங்களை மட்டுமே வென்றது. இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள தேசிய மாநாட்டு கட்சியின் (என்.சி) துணைத் தலைவர் உமர்…

மேலும்...

மேற்கு வங்கத்தை குஜராத் ஆக மாற்ற அனுமதிக்க முடியாது – மம்தா பானர்ஜி!

கொல்கத்தா (24 டிச 2020): மேற்கு வங்கத்தை குஜராத்தாக மாற்ற யாரும் அனுமதிக்க மாட்டார்கள் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மத்திய அரசு மற்றும் பாஜக மீது கடுமையாக சாடிய மம்தா  “நாங்கள் எங்கள் மண்ணை மதிக்கிறோம். அதைப் பாதுகாப்பது எங்கள் கடமை.  குஜராத் ஆக  மாற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று மம்தா பானர்ஜி கூறினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்ற வாரம் மேற்கு வங்கம்  வந்தபோது திரிணாமுல் அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான…

மேலும்...

அர்ணாப் கோசுவாமிக்கு பிரிட்டிஷ் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை அலுவலகம் ரூ .19 லட்சம் அபராதம்!

புதுடெல்லி (23 டிச 2020): ரிபப்ளிக் டிவி க்கு பிரிட்டிஷ் அரசு 2000 பவுண்ட்ஸ் (சுமார் 19 லட்சம் ரூபாய்) அபராதம் விதித்துள்ளது. குடியரசு டிவி, அர்னாப் கோஸ்வாமிக்கு சொந்தமானது, இதில் கடந்த செப்டம்பர் 6, 2019 அன்று ஒளிபரப்பப்பட்ட வெறுக்கத்தக்க பேச்சு, அநாகரீகமான மொழி மற்றும் தவறான மற்றும் கேவலமான நடைமுறைக்காக, இங்கிலாந்து தகவல் தொடர்பு ஒழுங்குமுறை அலுவலகம் 19 19 பவுண்ட்ஸ் (19 லட்சம் ரூபாய்) அபராதம் விதித்துள்ளது. சர்சைக்குரிய அந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான்…

மேலும்...

மேற்கு வங்கத்தில் 200 இடங்களை பாஜக வெல்ல தவறினால் பாஜக தலைவர்கள் ராஜினாமா செய்ய தயாரா?

புதுடெல்லி (23 டிச 2020); : மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜக 200 இடங்களை வெல்லத் தவறினால் ராஜினாமா செய்வோம் என்று எழுத்துப்பூர்வ உறுதி அளிக்குமாறு பிரசாந்த் கிஷோர் பாஜக தலைவர்களுக்கு சவால் விடுத்துள்ளார். “வரும் சட்டமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு 100 க்கும் குறைவான இடங்களே கிடைக்கும். பாஜகவின் வெற்றி அதற்கு மேல் இருந்தால் தான் ட்விட்டரில் இருந்து விலகுவேன்.” என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில்…

மேலும்...

முதலாக்கை ஒழித்த பாஜக என்னை விவாகரத்துக்கு தூண்டியுள்ளது – பாஜக எம்.பி. மனைவி அதிரடி!

முத்தலாக்கை ஒழித்ததாக சொல்லும் பாஜக என்னை விவாகரத்து செய்யுமாறு என் கணவரை வலியுறுத்துகிறது என்று பாஜக எம்.பி சௌமித்ரா மனைவி சுஜாதா தெரிவித்துள்ளார். பாஜக எம்.பி. சௌமித்ரா கானின் மனைவி சுஜாதா மண்டல் கான் பஜகவிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதையடுத்து, சுஜாதாவுக்கு சௌமித்ரா கான் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள சுஜாதா “தனிப்பட்ட வாழ்க்கையில் அரசியல் நுழைந்தால், அது உறவுகளுக்கு நல்லதல்ல. எனக்கு எதிராகத் தூண்டிவிடும் பாஜகவின் தவறான நபர்களுடன்…

மேலும்...