மோடி அமைச்சரவையில் உள்ளவர்கள் முதலில் கோவேக்சின் தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும் – தலைவர்கள் கோரிக்கை!

புதுடெல்லி (04 ஜன 2021): கோவேக்சின் கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை கட்டங்கள் முடிவடையாமல் மக்களுக்கு வழங்க அனுமதி வழங்கப்பட்டதற்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இரண்டு கட்ட சோதனை மட்டுமே முடிவடைந்த நிலையில் மூன்றாம் கட்ட சோதனை முடிவடைவதற்கு முன்னர் தடுப்பூசியை நடைமுறைப்படுத்த மோடி அரசாங்கத்தின் அவசர நடவடிக்கைக்கு எதிராக முக்கிய புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன, இது மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கோவேக்சின் தடுப்பூசி ஒப்புதலுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் சஷி தரூர் எம்.பி. கூறுகையில், கோவாக்ஸின்…

மேலும்...

கோவேக்சின் கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி!

புதுடெல்லி (03 ஜன 2021): கோவிஷீல்ட், கோவேக்சின் தடுப்பூசிகளை அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் தோன்றி ஓராண்டுக்குள் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தடுப்பூசிகளை உருவாக்கி உள்ளன. அந்த வகையில், இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கி உள்ள தடுப்பூசி, இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் அறிமுகமாகிறது. அதேபோல், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் இணைந்து தயாரித்த…

மேலும்...

பாஜக அரசு தரும் கொரோனா தடுப்பூசியை நம்ப முடியாது – அகிலேஷ் யாதவ் பகீர்!

லக்னோ (02 ஜன 2021): பாஜக அரசின் தடுப்பூசியை நம்ப முடியாது என்று இப்போது தடுப்பூசி பெறவில்லை என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். நாடெங்கும் கோவிட் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வரும் நிலையில் அகிலேஷ் யாதவ் இவ்வாறான கருத்தை முன்மொழிந்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் “எங்கள் தலைமையிலான அரசு அமைக்கப்படும் போது, ​​அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும். அதேவேளை பாஜக அரசு வழங்கும் தடுப்பூசி நம்பத்தகுந்ததல்ல” என்று அகிலேஷ் யாதவ் கூறினார்.

மேலும்...

டெல்லியில் பரபரப்பு – விவசாயிகள் போராட்டத்தில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை!

புதுடெல்லி (02 ஜன 2021):: விவசாய சட்டத்தை எதிர்த்து காசிப்பூரில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை அடுத்த காசிப்பூரில் உள்ள போராட்ட களத்தில் காஷ்மீர் சிங் என்ற விவசாயி அங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கழிப்பறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அவரது உடலுக்கு அருகில் தற்கொலைக் குறிப்பும் கிடைத்துள்ளது. . விவசாயிகள் போராட்டத்தின் போது தற்கொலை செய்து கொண்ட நான்காவது விவசாயி காஷ்மீர் சிங். மேலும் கடுமையான குளிர் மற்றும்…

மேலும்...

ஜே.பி.நட்டா கொரோனாவிலிருந்து நிவாரணம்!

புதுடெல்லி (01 ஜன 2021): கொரோனா பாதிப்பில் இருந்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குணமடைந்துள்ளார். கடந்த மாதம் 13ம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். அவரது குடும்பத்தினருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அனைவருக்கும் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து நட்டா குணமடைந்துள்ளார். இத்தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ‘கொரோனாவில் இருந்து குணமடைய வேண்டி எனக்காக பிரார்த்தனை…

மேலும்...

இந்தியாவில் கோவிட் தடுப்பூசி என்ற பெயரில் சைபர் மோசடி!

லக்னோ (01 ஜன 2021): கோவிட் தடுப்பூசிக்கான பதிவு என்ற பெயரில் சைபர் மோசடியில் சிலர் ஈடுபட்டுள்ளதாகவும் எனவே ஆதார் எண் ஒடிபி போன்ற எந்த தகவலையும் போலி தொலைபேசி மூலம் கேட்பவர்களிடம் கொடுக்கக் கூடாது என்று உபி அரசு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கோவிட் நோய்க்கு எதிராக பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை உத்தரப்பிரதேச அரசு இன்னும் கொண்டு வரவில்லை என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். மக்கள் சைபர் கிரைமிற்கு பலியாகலாம் என்றும் தடுப்பூசி பதிவுக்கு எந்த…

மேலும்...

ஹேப்பி நியூ இயருக்கு பதிலாக விவசாயிகள் இட்ட கோஷம்!

புதுடெல்லி (01 ஜன 2021): விவசாய விரோத சட்டங்களான வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியின் எல்லைகளில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் 37வது நாளாக தொடர்கிறது. நேற்று முன் தினம் மத்திய அரசின் அழைப்பின் பேரில் நடைபெற்ற 6ம் கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. இதன் காரணமாக சட்டங்களை திரும்ப பெறும் வரையில் போராட்டம் நீடிக்கும் என விவசாயிகளும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 2021ம் ஆண்டு பிறந்ததை அடுத்து நள்ளிரவு 12 மணிக்கு டெல்லியின்…

மேலும்...

பத்தாம் வகுப்பு மாணவர் சக மாணவரால் சுட்டுக் கொலை!

லக்னோ (31 டிச 2020): உத்தரப்பிரதேசத்தில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில், 14வயது மாணவன் சக மாணவனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷாஹர் பகுதியில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பில் இரு மாணவர்களுக்கு இடையே யார் பிடித்த இடத்தில் உட்காருவது தொடர்பாக நேற்று பிரச்சினை எழுந்தது. இதில் கோபமடைந்த ஒரு மாணவன், வீட்டிலிருந்து துப்பாக்கியை கொண்டுவந்து தன்னுடன் சண்டையிட்ட சக மாணவனை வகுப்பறையில்…

மேலும்...

மரபணு மாற்றப்பட்ட கோவிட் பாதித்தவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் 25 ஆக உயர்வு!

புதுடெல்லி (31 டிச 2020): இந்தியாவில் மேலும் ஐந்து பேருக்கு மரபணு மாற்றப்பட்ட கோவிட் நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, இதன் மூலம் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையை 25 ஆக உயர்ந்துள்ளது. புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் நேற்று உறுதிப்படுத்தப்பட்ட ஐந்து வழக்குகளில் நான்கு கண்டறியப்பட்டது. இந்த நோய் கண்டறியப்பட்டவர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட கோவிட் மாதிரிகள் பல்வேறு ஆய்வகங்களில் சோதனை செய்யப்படுகின்றன. நிம்ஹான்ஸ் பெங்களூர், சி.சி.எம்.பி ஹைதராபாத், என்.ஐ.வி புனே, என்.சி.டி.சி…

மேலும்...

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்!

திருவனந்தபுரம் (31 டிச 2020): மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள், தங்கள் நலனுக்கு எதிரானவை என்று கருதி அவற்றுக்கு எதிராக விவசாயிகள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு வட மாநிலங்களை, குறிப்பாக பஞ்சாப், அரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களுக்கு பல்வேறு மாநில அரசுகளும்…

மேலும்...