கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு பொறுப்பேற்க முடியாது – மத்திய அரசு பின்வாங்கல்!

புதுடில்லி (14 ஜன 2021): கோவிட் 19 தடுப்பூசியால் ஏற்படும் எந்தவொரு பக்க விளைவுகளுக்கும் தடுப்பூசி தயாரிப்பாளர்கள் மட்டுமே சட்டப்படி பொறுப்பாவார்கள் என்றும் மத்திய அரசு பொறுப்பேற்க முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கோவிட் 19 தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும் என்று தடுப்பூசி உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் அவர்களது கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. கோவிட் தடுப்பூசி குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்டது, எனவே அதன் பக்கவிளைவுகளுக்கு அரசாங்கமு ம் பொறுப்பேற்க…

மேலும்...

கொரோனா தடுப்பூசியும் முஸ்லிம்களும் – பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு!

லக்னோ (13 ஜன 2021); “இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவிட் 19 தடுப்பூசிகளை நம்பாத முஸ்லிம்கள் பாகிஸ்தான் செல்லலாம்.” என்று உத்தரபிரதேசம் சர்தானாவைச் சேர்ந்த எம்.எல்.ஏ சங்கீதா சிங் சோம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில் “சில முஸ்லிம்கள் நம் நாட்டையும், நமது விஞ்ஞானிகளையும், நமது போலீஸ் படையையும், பிரதமர் மோடியையும் நம்பாதது துரதிர்ஷ்டவசமானது. அவர்களின் ஆன்மா பாகிஸ்தானின் ஆன்மா. அவர்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும், எங்கள் விஞ்ஞானிகளின் பணியில் சந்தேகம் கொள்ளக்கூடாது, ”என்று சங்கீதா சிங்…

மேலும்...

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு விவசாயிகள் எதிர்ப்பு – போராட்டத்தை தொடர முடிவு!

புதுடெல்லி (13 ஜன 2021): விவசாயிகளின் சட்டங்களை ஆய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழுவை நியமிக்க உச்சநீதிமன்றம் எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த குழுவுக்கு எதிராக விவசாயிகள் அமைப்புகளும் எதிர்க்கட்சிகளும் முன்வந்துள்ளன. அவர்கள் குழுவுடன் ஒத்துழைக்க மாட்டார்கள் என்று அமைப்புகளின் கருத்து. சட்டத்தை ஆதரிப்பவர்கள் குழுவில் இருப்பதாகவும், இதன் பின்னணியில் மத்திய அரசு இருப்பதாகவும் விவசாயிகள் அமைப்புகள் தெரிவித்துள்ளன. பஞ்சாபில் உள்ள உழவர் அமைப்புகள் தாங்கள் ஒரு குழு முன் ஆஜராக மாட்டோம்…

மேலும்...

நீங்கள் செய்யவில்லை என்றால் நாங்கள் செய்வோம் – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!

புதுடெல்லி (11 ஜன 2021): வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்படுவதை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைக்கவில்லையென்றால் அதனை நாங்கள் நிறுத்தி வைக்க நேரிடும் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, ராஷ்டீரிய ஜனதா தள எம்.பி. மனோஜ் கே. ஜா உள்ளிட்டோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதுகுறித்த விசாரணையில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே “பிரச்சினையின் இணக்கமான தீர்வை எங்களால்…

மேலும்...

பறவைக் காய்ச்சல் பரவல் எதிரொலி – கோழி உள்ளிட்டவை இறக்குமதி நிறுத்தம்!

புதுடெல்லி (10 ஜன 2021): பறவைக் காய்ச்சல் பரவுவதால் டெல்லியில் பறவைகள் மற்றும் முட்டை பொருட்கள் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் மொத்த வர்த்தகம் 10 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பறவைக் காய்ச்சல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவாகியுள்ளது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, கேரளா உள்ளிட்ட மாநிலத்தின் சில பகுதிகளில் பறவைக் காய்ச்சல் பதிவாகியுள்ளதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்தார். மேலும் கிழக்கு டெல்லியில் 200 காகங்கள் இறந்துள்ளதாக முதல்வர் அரவிந்த்…

மேலும்...

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பரபரப்பு – மேலும் விவசாயி தற்கொலை

புதுடெல்லி (10 ஜன 2021): மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்குவில் மற்றொரு விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார். பஞ்சாபின் ஃபதேகான் சாஹிப் மாவட்டத்தில் உள்ள மஷ்ராய் கிராமத்தைச் சேர்ந்த அமரிந்தர் சிங் (40) என்ற விவசாயில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் இதன் மூலம், விவசாய போராட்டத்தின் மூலம் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை நான்கு ஆக உயர்ந்துள்ளது. போராட்டம் நடந்து கொண்டிருந்த பிரதான கூடாரத்தின் பின்புறத்தில் விவசாயி அமரிந்தர்…

மேலும்...

லவ் ஜிஹாதுக்கு எந்த ஆதாரமும் இல்லை – நீதிமன்றத்தில் வாங்கி கட்டிக் கொண்ட யோகி அரசு!

அலகாபாத் (07 ஜன 2021): உத்திர பிரதேச அரசின் சர்ச்சைக்குரிய புதிய சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட ஒரு முஸ்லீமுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று யோகி ஆதித்யநாத் அரசாங்கம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்து வாங்கி கட்டிக் கொண்டது. உத்திர பிரதேசத்தில் லவ்ஜிஹத் மதமாற்ற தடை சட்டம் என்ற பெயரில் முஸ்லிம்களை குறி வைத்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதன்படி அக்‌ஷய் குமார் தியாகி என்பர் அளித்த புகாரின் அடிப்படையில் நதீம் எனபவர் முசாபர்நகரில்…

மேலும்...

ஈவிஎம் முறையில் தேர்தல் நடத்துவதற்கு தடை கோரும் மனு – உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

புதுடெல்லி (07 ஜன 2021): மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு (ஈ.வி.எம்) பதிலாக தேர்தல்களில் வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்துமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. வழக்கறிஞர் சி.ஆர்.ஜெயசுகின் ஈவிஎம் மெஷினில் நடத்தப்படும் தேர்தல் முறைக்கு எதிராக மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் முறைகேடுகள் மற்றும் அவநம்பிக்கை காரணமாக பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் ஈ.வி.எம் அரசியலமைப்பின் 324 வது பிரிவை மீறுவதாகவும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். மேலும் தேர்தல்கள் சுதந்திரமாகவும்…

மேலும்...

அர்ணாப் கோஸ்வாமிக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளன – மகாராஷ்டிரா அரசு திட்டவட்டம்!

மும்பை (07 ஜன 20221): ரிபப்ளிக் டிவி தலைமை ஆசிரியர் அர்ணாப் கோஸ்வாமிக்கு எதிரான டிஆர்பி வழக்கில் வலுவான ஆதாரங்கள் உள்ளன என்று மகாராஷ்டிரா அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. டிஆர்பி ரேட்டிங் வழக்கில் தனக்கு எதிரான குற்றப்பத்திரிகை மற்றும் எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யக் கோரி அர்னாப் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஜனவரி 15 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா அரசு சார்பில் ஆஜரான கபில் சிபல், தொலைக்காட்சி மதிப்பீட்டு நிறுவனமான…

மேலும்...
ECI

வெளிநாடு வாழ் இந்தியர்களும் இனி வாக்களிக்கலாம் – மத்திய வெளிவிவகார அமைச்சகம் ஒப்புதல்!

புதுடெல்லி (05 ஜன 2021): தேர்தல்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள். மின்னஞ்சல் மூலம் வாக்களிக்க வெளிவிவகார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்களின் பல ஆண்டுகள் கோரிக்கையான வெளிநாடுகளிலிருந்து வாக்களிக்கும் கோரிக்கையாக இது இருந்து வந்த நிலையில் இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு மத்திய வெளிவிவகார அமைச்சகம் எழுதிய கடிதத்தில், இதுகுறித்தது இறுதி முடிவை எடுப்பதற்கு முன்னர் வெளிநாட்டினர் அமைப்புகள் உட்பட அனைவருடனும் கலந்துரையாடல்களை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது. விரைவில் நடைபெறவுள்ள தமிழகம் உள்ளிட்ட ஐந்து…

மேலும்...