மருத்துவர்கள், செவிலியர்களையும் விட்டு வைக்காத ஏபிவிபி குண்டர்கள்!

புதுடெல்லி (06 ஜன 2020): டெல்லி ஜெ.என்.யுவில் தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீதும் ஏபிவிபி குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று முகத்தில் துணியை கட்டிக் கொண்டு வந்து ஏபிவிபி குண்டர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் மாணவர் பேரவை தலைவர் ஆயிஷ் கோஷ் பலத்த காயம் அடைந்தார். மேலும் காயம் அடைந்த 20 பேர் டெல்லி எய்ம்ஸ்…

மேலும்...

டெல்லியில் பிப்ரவரி 8 ஆம் தேதி சட்டசபை தேர்தல்!

புதுடெல்லி (06 ஜன 2020): டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று அறிவித்தார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “டெல்லி சட்ட்சபையின் பதவிக்காலம் பிப்ரவரி 22-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. 2020, ஜனவரி 6ம் தேதி நிலவரப்படி டெல்லியில் ஒரு கோடியே 46 லட்சத்து 92 ஆயிரத்து 136 வாக்காளர்கள் உள்ளனர். டெல்லி சட்டசபை தேர்தல் தொடர்பாக 4 கட்டங்களாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தலைமை செயலாளர்,…

மேலும்...

டெல்லி பல்கலைக்கழக தாக்குதல் – 20 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

புதுடெல்லி (06 ஜன 2020): டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தக்குதலில் காயம் அடைந்த 20 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சபர்மதி விடுதிக்குள் ஆயுதங்களுடன் முகமூடி அணிந்த சிலர் உள்ளே நுழைந்து விடுதியை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அயிஷ் கோஷ் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். அவர் தலை உடைந்து ரத்தம் கொட்டியது. முன்னதாக நேற்று முன்தினம் ஏ.பி.வி.பியைச் சேர்ந்த…

மேலும்...

டெல்லியில் பரபரப்பு – ஜே என் யூ மாணவர் சங்கத் தலைவர் மீது கொலை வெறி தாக்குதல்!

புதுடெல்லி (05 ஜன 2020): டெல்லி ஜவஹர்லால் நேரு (JNU) பல்கலைக்கழகம் மாணவர்கள் சங்க தலைவர் அய்ஷி கோஷ் மீது கொடூர தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. முகமூடி அணிந்து வந்த நபர்கள் மூர்க்கத்தனமாக தாக்கியதாக அய்ஷி கோஷ் புகார் தெரிவித்துள்ளார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சபர்மதி விடுதிக்குள் ஆயுதங்களுடன் முகமூடி அணிந்த சிலர் உள்ளே நுழைந்து விடுதியை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அயிஷ் கோஷ் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்….

மேலும்...

பாஜகவுக்கு இனி தொடர்ந்து கஷ்ட காலம்தான்- சிவசேனா தலைவர் சரமாரி தாக்கு!

மும்பை (05 ஜன 2020): “பாஜகவுக்கு இனி தொடர்ந்து கஷ்ட காலம்தான்!” என்று சிவசேனா தலைவரும் சாம்னா பத்திரிகையின் தலைமை செய்தியாளருமான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பையில் ஜமாத் ஏ இஸ்லாமி அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சஞ்சய் ராவத், “பாஜகவுக்கு மகாராஷ்டிராவில் கொடுத்த பாடம் போதாது என நினைக்கிறேன். இனி தொடர்ந்து அவர்கள் பாடம் புகட்ட வேண்டும். மகாராஷ்டிராவில் பாஜக சந்தித்த அவமானம் நாடெங்கும் சந்திக்க வேண்டும்.” என்றார். மேலும்…

மேலும்...

மகாராஷ்டிர முஸ்லிம் அமைச்சர் திடீர் ராஜினாமா!

மும்பை (05 ஜன 2020): மகாராஷ்ட்டிர முஸ்லிம் அமைச்சர் அப்துல் சத்தார் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். சிவசேனாவை சேர்ந்த அப்துல் சத்தார் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்து வழங்ப்படும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில் இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. இதனால் அவர் அதிருப்தி அடைந்துள்ளார். இதனால் அவர் அதிருப்தி அடைந்துள்ளார். அப்துல் சத்தாரின் ராஜினாமா கடிதத்தை சிவசேனா இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதுகுறித்து, அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே…

மேலும்...

குடியுரிமை சட்ட ஆவணங்களை மறுக்கலாம் – உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்!

ஐதராபாத் (04 ஜன 2020): “குடியுரிமை சட்டம் தொடர்பான ஆவணங்கள் கேட்கும் பட்சத்தில் அதனை சமர்ப்பிக்க வேண்டியதில்லை!” என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் மஹ்மூது பிராச்சா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய மஹ்மூத், “குடியுரிமை சட்டம் தொடர்பாகவோ (CAA,) NRC, NPR தொடர்பாகவோ அதிகாரிகள் ஆவணங்கள் கேட்டால் கொடுக்காமல் மறுப்பதில் தவறு ஏதும் இல்லை. அதேவேளை தவறான தகவல் கொடுப்பது மட்டுமே தவறாகும், எனவே நம்மிடம் சரியான தகவல் இல்லை எனக் கூறி மறுத்துவிடலாம்” என்று தெரிவித்துள்ளர். மேலும்…

மேலும்...

முஸ்லிம்களை மிரட்டும் பாஜக எம்.எல்.ஏ! (Video)

பெங்களூரு (04 ஜன 2020): இந்தியாவில் முஸ்லிம்கள் 18 சதவீதம்தான் உள்ளீர்கள் நாங்கள் 80 சதவீதம் உள்ளோம் என்று பாஜக எம்.எல்.ஏ மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். கடும் எதிர்ப்பையும் மீறி, நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக்கூறி நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அம்மாநில பாஜக எம்.எல்.ஏ சோம சேகர் ரெட்டி இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசும்போது, “இந்த நாட்டில் இந்துக்கள்…

மேலும்...

இங்கே பிறந்தோம் இங்கேயே மடிவோம் – மக்கள் வெள்ளத்தால் திணறிய ஐதராபாத்!

ஐதராபாத் (04 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஐதராபாத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் 40 அமைப்புகளால் ஒருங்கிணைக்கப் பட்டு இருந்தது. பல்வேறு மதத்தினர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் லட்சக்கணக்கான ஆண்களும், பெண்களும் பங்கேற்றனர். அவர்கள் தேசியக் கொடியை ஏந்தியபடி, ‘இங்கேயே பிறந்தோம் இங்கேயே மடிவோம்” என்றவாறு கோஷமிட்டனர். போராட்டத்தை ஒட்டி ஐதராபாத்தில் அனைத்து கடைகள் நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன.

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு பாஜக முதல்வர் எதிர்ப்பு – நெருக்கடியில் பாஜக தலைமை!

புதுடெல்லி (04 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்கு பாஜகவை சேர்ந்தவரும் அஸ்ஸாம் முதல்வருமான திரு. சர்பானந்த சோனோவால் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது பாஜகவிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தலைமையிலான மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. இதற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மேலும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்தச் சட்டத்திற்கு, பா.ஜ.க., ஆளும் மாநில முதலமைச்சர்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த, அசாம் மாநில முதலமைச்சர்…

மேலும்...