டெல்லி பல்கலைக்கழக தாக்குதல் – 20 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

Share this News:

புதுடெல்லி (06 ஜன 2020): டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தக்குதலில் காயம் அடைந்த 20 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சபர்மதி விடுதிக்குள் ஆயுதங்களுடன் முகமூடி அணிந்த சிலர் உள்ளே நுழைந்து விடுதியை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அயிஷ் கோஷ் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். அவர் தலை உடைந்து ரத்தம் கொட்டியது.

முன்னதாக நேற்று முன்தினம் ஏ.பி.வி.பியைச் சேர்ந்த ரித்விக் ராஜின் தலைமையில் ஒரு கும்பல் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. அனைத்திந்திய மாணவர் சங்கத்தின் தேசியத் தலைவரும், ஜே.என்.யு. மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான என். சாய் பாலாஜி, ஒய்ஷி கோஷ் தாக்கப்பட்டு ரத்தம் சொட்டும் காட்சியை காட்டும் காணொளியை தமது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஏ.பி.வி.பி. அமைப்பை சேர்ந்தவர்களே அவரைத் தாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே காயம் அடைந்த சுமார் 20 மாணவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Share this News:

Leave a Reply