பில்கிஸ் பானு வழக்கை விசாரிக்க முடியாது – உச்ச நீதிமன்ற நீதிபதி மறுப்பு!

புதுடெல்லி (13 டிச 2022): குஜராத்தில் தன்னை வன்புணர்ந்து சீரழித்து, தன் குடும்ப உறுப்பினர்களையும் படுகொலை செய்த 11 பேரை விடுதலை செய்ததை எதிர்த்து பில்கிஸ் பானுவால் தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி மறுத்துவிட்டார்.

2002 குஜராத் கலவரத்தின் போது 2000த்திற்கு அதிகமான முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். அப்போது தன்னை வன்புணர்ந்து சித்திரவதை செய்து தனது குழந்தை உட்பட குடும்ப உறுப்பினர்களை படுகொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரை குஜராத் அரசு விடுவித்ததை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

இந்நிலையில் பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி பெலா எம் திரிவேதி தன்னை விடுவித்துக் கொண்டு விலகினார். இதனால் இந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. எனினும், நீதிபதியின் விலகலுக்கான எந்தக் காரணத்தையும் அந்த அமர்வு தெரிவிக்கவில்லை.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply