சிறுமிக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் கைது!

Share this News:

ஜார்கண்ட் (14 டிச 2022): ஜார்கண்டின் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர், 8 வயது மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர் கடந்த சில நாட்களாக, சிறுமியை அருகிலுள்ள புதருக்கு அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக போலீஸ் அதிகாரி கூறினார்.

கடந்த வாரம் படாம்டா தொகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், குற்ற செயலில் ஈடுபட்ட நபரை கையும் களவுமாகப் பிடித்து, கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து சிறுமியில் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை யாரிடமும் கூறக்கூடாது என ஆசிரியர் தன்னை மிரட்டியதாக சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனை அறிந்த கிராம மக்கள் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரை கடுமையாக தாக்கினர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தலைமை ஆசிரியரை மீட்டனர். சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தலைமை ஆசிரியரை போலீசார் கைதுசெய்தனர்.


Share this News:

Leave a Reply