ஓடுதளத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீர் நிறுத்தம்!

கொச்சி (13 டிச 2022): ஓடுதளத்திலிருந்து புறப்பட்ட பிறகு விமானம் திடீரென நிறுத்தப்பட்டது. கொச்சி-கோழிக்கோடு-பஹ்ரைன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்இரண்டரை மணி நேரம் தாமதமானது. தொழில்நுட்பக் கோளாறுதான் என்பது அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். விமானத்தில் ஏசி சரியாக இயங்காததால் பயணிகளும் சிரமப்பட்டனர். விமானத்தின் கதவு மூடப்பட்டபோது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இந்த பிடிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விமானம் புறப்பட்ட பிறகு எந்த அறிவிப்பும் கூட கொடுக்காமல் நிறுத்தப்பட்டதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும்...

பில்கிஸ் பானு வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

புதுடெல்லி (13 டிச 2022): பில்கிஸ் பானு வழக்கை உச்சநீதிமன்றம் இன்று பரிசீலிக்கவுள்ளது. நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு இந்த மனுவை பரிசீலிக்கும். குஜராத் கலவரத்தின் போது தன்னை வன்புணர்ந்து சித்திரவதை செய்து தனது குழந்தை உட்பட குடும்ப உறுப்பினர்களை படுகொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரை குஜராத் அரசு விடுவித்ததை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார். முன்னதாக, ரஸ்தோகி தலைமையிலான அமர்வு, குற்றம் சாட்டப்பட்டவர்களின் தண்டனையை குறைப்பது குறித்து…

மேலும்...

முக்கிய சாலையில் இளம் பெண்கள் நடனம் – காவல்துறை நடவடிக்கை: வீடியோ

காஜியாபாத் (13 டிச 2022): காஜியாபாத் முக்கிய சாலையில் நடனமாடியதாக இரண்டு இளம் பெண்கள் உட்பட 3 பேரை காசியாபாத் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ இரண்டு நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். வீடியோவில், இரண்டு இளம் பெண்கள் மற்றும் ஒரு இளைஞன் இரவில் தங்கள் காரை சாலையில் நிறுத்திவிட்டு அதன் பானட்டில் கேக் வெட்டிய பிறகு பல பாடல்களுக்கு நடனமாடுவதைக் காணலாம். மேம்பால…

மேலும்...

மௌலானா ஆசாத் கல்வி உதவித் தொகை ரத்து – மாணவர்கள் போராட்டம்!

புதுடெல்லி (13 டிச 2022): மௌலானா ஆசாத் கல்வி உதவித் தொகையை ரத்து செய்த ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு மாணவர் அமைப்புகளின் தலைமையில், கல்லூரி மாணவர்கள் டெல்லி சாஸ்திரி பவனுக்கு பேரணியாகச் சென்றனர். “பல மாணவர்களின் வாழ்க்கையை பாதிக்கும் இந்த நடவடிக்கையை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்; இல்லையெனில் போராட்டம் நடத்துவோம்!” என மாணவர் அமைப்புகள் தெரிவித்தன. சிறுபான்மை மாணவர்களுக்கு இழைக்கும் அநீதி – நவாஸ்கனி கண்டனம்!…

மேலும்...

யாழ்ப்பாணம்- சென்னை விமான சேவை மீண்டும் தொடக்கம்!

கொழும்பு (12 டிச 2022): யாழ்ப்பாணம் – சென்னை இடையேயான விமான சேவையை இலங்கை மீண்டும் தொடங்கியுள்ளது. கோவிட் பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட விமானச்சேவை, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முதல் மீண்டும் தொடங்கப் பட்டுள்ளது. இலங்கை விமான நிலைய அதிகார சபையின் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கு அலையன்ஸ் ஏர் வாரத்திற்கு நான்கு முறை செயல்படும். சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் யாழ்ப்பாண விமான நிலைய ஓடுபாதை மேம்படுத்தப்பட வேண்டும். தற்போது 75…

மேலும்...

கச்சா எண்ணை கடும் விலை சரிவு – விலையை குறைக்க கோரிக்கை!

புதுடெல்லி (12 டிச 2022): கடந்த மார்ச் மாதத்தில் 129 டாலராக இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை, தற்போது சுமார் 50 டாலர்கள் குறைந்து 76 டாலருக்கு விற்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் 200 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி தொடர்கிறது. எனவே கச்சா எண்ணெயின் விலை சரிவுக்கு ஏற்ப பெட்ரோல், டீசலின் விலையை ஒன்றிய அரசு உடனடியாகக் குறைக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

மேலும்...

பாஜகவில் இணையும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள்?

அஹமதாபாத் (12 டிச 2022): குஜராத்தில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. நடந்து முடிந்த குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் 17 இடங்களில் வெற்றி பெற்றது. இம்முறை போட்டியிட்ட ஆம் ஆத்மி 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில் எதிர் பார்த்த வெற்றி கிடைக்காத்தால் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெற்றி…

மேலும்...

குஜராத் புதிய எம்.எல்.ஏக்களில் 40 பேர் குற்ற வழக்கு பின்னணி கொண்டவர்கள்!

அஹமதாபாத் (11 டிச 2022): 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டசபையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 40 எம்எல்ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. வேட்பாளர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) வெளியிட்டுள்ள அறிக்கையில் இது கூறப்பட்டுள்ளது. இதில் 29 உறுப்பினர்கள் கொலை முயற்சி மற்றும் கற்பழிப்பு போன்ற கடுமையான குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர். இதில் 20 பேர் பாஜக எம்எல்ஏக்கள், 4 பேர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள். ஆம் ஆத்மி கட்சி(2),…

மேலும்...

கைக் குழந்தையுடன் டாக்சியில் பயணித்த பெண் கூட்டு வன்புணர்வு – குழந்தை படுகொலை!

மும்பை (11 டிச 2022): மும்பையில் இளம்பெண் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரது பத்து மாதப் பெண் குழந்தையும் படுகொலை செய்யப்பட்டுள்ளது. மும்பையின் அகமதாபாத் நெடுஞ்சாலையில் மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் தனது கைக்குழந்தையுடன் ஒரு பெண் டாக்சியில் ஏறினார். அந்த டாக்சியில் ஏற்கனவே 4 பேர் இருந்துள்ளனர். சிறிது தூரம் சென்றபின்னர், டாக்ஸி டிரைவர் மற்றும் அதில் இருந்த 4 பேர் அந்த பெண்ணைக் கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர். அத்துடன் குழந்தையைத் தூக்கி எறிந்தும்…

மேலும்...

துபாய் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பாம்பு!

துபாய் (10 டிச 2022): கேரளாவிலிருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பாம்பு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பி737-800 விமானம் கேரள மாநிலம் காலிகட்டில் இருந்து சென்றது. சனிக்கிழமை துபாய் விமான நிலையத்தில் தரையிறங்கிய நிலையில் விமானத்தின் சரக்குக் கிடங்கில் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது, இதனை அடுத்து பயணிகள் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர். மேலும் விமான ஒழுங்குமுறை டிஜிசிஏ சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்….

மேலும்...