நீக்கப்பட்ட மோடியின் யூட்டூப் சேனல் டிஸ்லைக் பட்டன்!

புதுடெல்லி (21 அக் 2020): சமீபத்தில் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் யூடூப் டிஸ்லைக் பட்டன் நீக்கப்பட்டுள்ளது. நேற்று பிரதமர் ஆற்றிய உரையில் “கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்திய மக்கள் நெடுந்தூரம் பயணித்துள்ளனர். பொதுமுடக்கம்தான் போயிருக்கிறதே தவிர வைரஸ் இன்னும் போகவில்லை என்பதை மறந்துவிடக்கூடாது. கடந்த 7-8 மாதங்களாக இந்தியர்களின் முயற்சியால் இந்தியா தற்போது நிலையாக இருக்கிறது. பொருளாதார நடவடிக்கைகளும் படிப்படியாக வேகமாக வளர்ந்து வருகின்றன. நமது பொறுப்புகளுக்காக இப்போது நம்மில் பலரும் வீட்டை விட்டு…

மேலும்...

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை (20 அக் 2020): தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சேலம், தர்மபுரி, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை…

மேலும்...

ஹஜ் 2021 குறித்து மத்திய அமைச்சர் புதிய தகவல்!

புதுடெல்லி (19 அக் 2020): 2021 ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரை சர்வதேச வழிகாட்டுதல்களின்படி வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்படும் என்று மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார். இஸ்லாமியர்களின் புனித கடமைகளில் ஒன்று ஹஜ் பயணம் மேற்கொள்வது ஆகும். வருகிற 2021ம் ஆண்டுக்கான ஹஜ் பயணம் பற்றிய முக்கிய காரணிகளை முடிவு செய்வதற்காக உயர்மட்ட அளவிலான கூட்டம் ஒன்று இன்று நடந்தது. இதில், மத்திய சிறுபான்மையோர் அமைச்சர் முக்தார் நக்வி கலந்து கொண்டார். கூட்டத்தின் பின்பு செய்தியாளர்களிடம்…

மேலும்...

நீட் தேர்வு சாதனையாளர் சுஹைப் அப்தாபுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு!

சென்னை (19 அக் 2020): நீட் தேர்வில் 720 க்கு 720 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் சாதனை படித்துள்ள ஒடிஸ்ஸா மாணவர் சுஹைப் அப்தாபுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு தெரிவித்துள்ளார். ஓடிஸ்ஸா வை சேர்ந்த மாணவர் சுஹைப் அப்தாப் 720 க்கு 720 மதிப்பெண்கள் எடுத்து புதிய சாதனை படைத்தார். அவரது சாதனையை இந்திய அளவில் பலதரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சுஹைப் அப்தாபுக்கு தெரிவித்துள்ள பாராட்டில் கல்வி’, ‘அறிவொளி’, ‘உயர்வு’…

மேலும்...

கொரோனா போய்விட்டது என்று கூறிய பாஜக தலைவருக்கு கொரோனா பாதிப்பு!

கொல்கத்தா (19 அக் 2020): மேற்குவங்கத்தில் கொரோனா வைரஸ் போய்விட்டது என்று கூறிய பாஜக மூத்த தலைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநில பாஜக தலைவரும், மிட்னாபூரைச் சேர்ந்த மக்களவை உறுப்பினருமான திலீப் கோஷ், கடந்த சில மாதங்களாக முதல்வர் மம்தா பானர்ஜி அரசுக்கு எதிராக பேரணிகளை நடத்தினார். அப்போது, ‘கொரோனா வைரஸ் போய்விட்டது’ என்று கூறினார். இந்நிலையில், கடந்த 11ம் தேதி முதல் திலீப் கோஷ் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்….

மேலும்...

உச்சம் தொடும் கொரோனா – இந்தியாவிற்கு மேலும் அதிர்ச்சி தகவல்!

புதுடெல்லி (18 அக் 2020): இந்தியாவில் வரும் பிப்ரவரியில் கொரோனா பாதிப்பு 1.05 கோடியாக இருக்கும் என்று மத்திய அரசு நியமித்த குழு தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரசின் தீவிர பாதிப்பு பற்றி ஆய்வு செய்ய, இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கிளைகள் மற்றும் ஐ.ஐ.டி. ஆகியவற்றின் உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்றை மத்திய அரசு நியமித்தது. இந்த குழுவானது வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதன்…

மேலும்...

நீட் தேர்வு வரலாற்றில் மாணவர் சுஹைப் அப்தாப் புதிய சாதனை!

புதுடெல்லி (17 அக் 2020): நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது இதில் ஓடிஸ்ஸா வை சேர்ந்த மாணவர் சுஹைப் அப்தாப் 720 க்கு 720 மதிப்பெண்கள் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார். அதேபோல டெல்லியை சேர்ந்த அகன்ஸா சிங்கும் 720 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவர் சுஹைப் அப்தாபுக்கும் அகன்ஷா சிங்கிற்கும் பாராட்டுக்கள் குவிகின்றன.

மேலும்...

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு கொரோனா தொற்று!

புதுடெல்லி (16 அக் 2020): காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக அளவில் பரவி வரும் கொரோனா தொற்று முக்கிய தலைவர்களையும் விட்டு வைப்பதில்லை. இந்நிலையில் குலாம் நபி ஆசாத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது,.இது குறித்து டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ளதாவது: எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் தனிமைப்படுத்தி உள்ளேன். என்னுடன் கடந்த சில தினங்களாக தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும்...

மத்திய பாஜக அரசின் மற்றுமொரு சாதனை – ராகுல் காந்தி சாடல்!

புதுடெல்லி (16 அக் 2020): மத்திய அரசின் மற்றும் ஒரு சாதனையாக கொரோனாவை கட்டுப்படுத்துவதிலும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானோடு போட்டி போட முடியவில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே பாதிப்புக்கு உள்ளாகியிருந்த பொருளாதாரம் கொரோனாவால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த இந்திய அரசு தவறிவிட்டதாகவும் பலதரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் மத்திய அரசை மீண்டும் விமர்சித்துள்ள ராகுல் காந்தி, கொரோனாவை கட்டுப்படுத்துவதிலும் பாகிஸ்தான்,…

மேலும்...

12 மணிநேரத்தில் 7 பேர் மர்ம மரணம் – விசாரணைக்கு உத்தரவு!

போபால் (15 அக் 2020): மத்தியப் பிரதேசத்தில் கடந்த 12 மணிநேரத்தில் 7 பேர் மர்மமான முறையில் மரணமடைந்தது குறித்து விசாரணை நடத்த முதலமைச்சர் திரு. சிவ்ராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார். மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உஜ்ஜைன் நகரில் கடந்த 12 மணி நேரத்தில் 7 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். அவர்களின் மரணத்திற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், இந்த மர்ம…

மேலும்...