கொரோனா போய்விட்டது என்று கூறிய பாஜக தலைவருக்கு கொரோனா பாதிப்பு!

Share this News:

கொல்கத்தா (19 அக் 2020): மேற்குவங்கத்தில் கொரோனா வைரஸ் போய்விட்டது என்று கூறிய பாஜக மூத்த தலைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநில பாஜக தலைவரும், மிட்னாபூரைச் சேர்ந்த மக்களவை உறுப்பினருமான திலீப் கோஷ், கடந்த சில மாதங்களாக முதல்வர் மம்தா பானர்ஜி அரசுக்கு எதிராக பேரணிகளை நடத்தினார். அப்போது, ‘கொரோனா வைரஸ் போய்விட்டது’ என்று கூறினார்.

இந்நிலையில், கடந்த 11ம் தேதி முதல் திலீப் கோஷ் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

அதனையடுத்து கொல்கத்தாவின் சால்ட் லேக் சிட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளார். கொரோனா போய்விட்டது என்று பேசிய பாஜக மாநில தலைவருக்கு கொரோனா உறுதியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply