நீட் தேர்வு சாதனையாளர் சுஹைப் அப்தாபுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு!

Share this News:

சென்னை (19 அக் 2020): நீட் தேர்வில் 720 க்கு 720 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் சாதனை படித்துள்ள ஒடிஸ்ஸா மாணவர் சுஹைப் அப்தாபுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஓடிஸ்ஸா வை சேர்ந்த மாணவர் சுஹைப் அப்தாப் 720 க்கு 720 மதிப்பெண்கள் எடுத்து புதிய சாதனை படைத்தார். அவரது சாதனையை இந்திய அளவில் பலதரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சுஹைப் அப்தாபுக்கு தெரிவித்துள்ள பாராட்டில் கல்வி’, ‘அறிவொளி’, ‘உயர்வு’ மற்றும் ‘உத்வேகம்’ ஆகிய நான்கு புள்ளிகளை இந்த வெற்றி சிறப்பித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தமிழகத்தில் நீட் தேர்வை பல தரப்பினரும் எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply