உன்னாவ் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயை வேட்பாளராக நிறுத்தும் காங்கிரஸ்!

உன்னாவ் (13 ஜன 2022): உ.பி., சட்டசபை தேர்தலில், உன்னாவ் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயை, காங்கிரஸ் வேட்பாளராக நியமித்துள்ளது. இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், உன்னாவ் மகளுக்கு பாஜக அநீதி இழைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். “இப்போது, [வன்புணர்வு செய்யப்பட்டவரின் தாயார்] நீதியின் முகமாக இருப்பார்,” என்று அவர் ட்வீட் செய்துள்ளார். பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் 2017 ஆம் ஆண்டு உன்னாவ் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்…

மேலும்...

ஆட்டம் காணும் பாஜக – அயோத்தியில் போட்டியிடும் யோகி ஆதித்யநாத்!

லக்னோ (13 ஜன 2022): உத்திர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தி தொகுதியில் போட்டியிடுகிறார். நாடே எதிர்பார்க்கும், உத்திர பிரதேச தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. 2 பாஜக அமைச்சர்கள் உட்பட 6 பாஜக எம்எல்ஏக்கள் கட்சியை விட்டு விலகிய நிலையில் பாஜக அங்கு ஆட்டம் கண்டுள்ளது. இந்நிலையில் உ.பி.யில் ஆட்சியைத் தக்கவைக்க தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயில் கட்டப்பட்டு வரும் அயோத்தியில் போட்டியிடுகிறார். டெல்லியில் நடைபெற்ற பாஜகவின்…

மேலும்...

உத்திர பிரதேச தேர்தலில் திடீர் திருப்பம் – மாயாவதியின் அறிவிப்பால் கட்சியினர் அதிர்ச்சி!

லக்னோ (12 ஜன 2022): உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி போட்டியிடப் போவதில்லை என அக்கட்சியினர் அறிவிப்பு லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் மிஸ்ரா இதை தெரிவித்தார். மாநிலத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளிலும், கூட்டணி எதுவும் இல்லாமல் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. முன்னதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

பாஜக சார்பில் 20 முஸ்லிம் வேட்பாளர்கள் – சூடுபிடிக்கும் உ.பி தேர்தல் களம்!

லக்னோ (11 ஜன 2022): உத்தரப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 20 முஸ்லிம் வேட்பாளர்களையாவது நிறுத்த வேண்டும் என்று பாஜக மத்திய தலைமையிடம் சிறுபான்மை மோர்ச்சா கேட்டுக் கொண்டுள்ளது. 2017 தேர்தலில் அக்கட்சி ஒரு முஸ்லிம் வேட்பாளரையும் நிறுத்தவில்லை. “முஸ்லீம் மக்கள்தொகை அதிகம் இருக்கும் பல தொகுதிகள் உள்ளன. பல இடங்களில் நாங்கள் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளோம். சம்பல், மொராதாபாத் மற்றும் மீரட் போன்ற தொகுதிகளில், முஸ்லிம் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்,” என்று…

மேலும்...

காலியாகும் பாஜக கூடாரம் – பாஜக அமைச்சரை தொடர்ந்து சமாஜ்வாதியில் இணையும் 13 எம்.எல்.ஏக்கள்!

லக்னோ (11 ஜன 2022): உ.பி. தொழிலாளர் துறை அமைச்சர், பா.ஜ.வில் இருந்து விலகியதையடுத்து உத்தரப் பிரதேசத்தில் உள்ள பதிமூன்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் சமாஜ்வாடி கட்சியில் இணையவுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். உத்தரபிரதேச தொழிலாளர் துறை அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா, அமைச்சரவை மற்றும் பாஜகவில் இருந்து ராஜினாமா செய்து சமாஜ்வாதி கட்சியில் செவ்வாய்கிழமை இணைந்ததை அடுத்து இந்த தகவலை சரத் பவார் தெரிவித்துள்ளார். “உத்தரபிரதேசத்தில், நாங்கள் சமாஜ்வாதி கட்சி மற்றும்…

மேலும்...
ECI

ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு!

புதுடெல்லி (08 ஜன 2022): உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. அட்டவணைப்படி, இந்த ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை நடைபெறும். ஐந்து மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் முடியும். உத்தரபிரதேசத்தில் 403 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மணிப்பூரின் 60…

மேலும்...
ECI

ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

புதுடெல்லி (08 ஜன 2022): கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் தேதியை இன்று மாலை 3.30 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் 6 முதல் 8 கட்டங்களாகவும், பஞ்சாபில் 2 முதல் 3 கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மணிப்பூரில் இரண்டு கட்டங்களாகவும், கோவா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது. உ.பி.யில் தற்போது 1,74,351…

மேலும்...

பாஜக எம்.எல்.ஏ கன்னத்தில் விவசாய சங்கத் தலைவர் விட்ட பளார் – வீடியோ!

உன்னாவ் (07 ஜன 2022): உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் பாஜக எம்.எல்.ஏ. பங்கஜ் குப்தா கன்னத்தில் விவசாய சங்கத் தலைவர் ஒருவர் பொது இடத்தில் சரமாரியாக அறைந்தார். இந்த திடீர் ஆத்திரமூட்டலுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. எம்.எல்.ஏ.வை கன்னத்தில் அறைந்தவரின் பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை. எம்.எல்.ஏ. தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. उन्नाव सदर से भाजपा विधायक पंकज गुप्ता को आयोजित जनसभा में किसान नेता ने…

மேலும்...

உத்திர பிரதேசத்தில் பசுக்களுக்கான ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்!

லக்னோ (16 நவ 2021): உத்தரபிரதேசத்தில் பசுக்களுக்காக சிறப்பு ஆம்புலன்ஸ் சேவையை அரசு தொடங்கியுள்ளது. மோசமான நிலையில் உள்ள பசுக்களுக்காக இந்த சேவை தொடங்கப்படும் என்று விலங்குகள் நலன் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமி நாராயண் சவுத்ரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் தெரிவிக்கையில், நாட்டின் தற்போதைய திட்டத்தின் ஒரு பகுதியாக 515 ஆம்புலன்ஸ்கள்யஆரம்பத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் டிசம்பரில் அமலுக்கு வரும். அவசரகால இலக்கமான 112க்கு ஆம்புலன்ஸ் சேவையை அழைக்கலாம் என்று அமைச்சர் கூறினார். மேலும் அழைப்பு வந்த…

மேலும்...

மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன், ஸ்கூட்டி – உற்சாக அறிவிப்பு!

லக்னோ (21 அக் 2021): உத்திர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் காட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. பா.ஜ.க அரசு மீண்டும் ஆட்சியை தக்க வைக்க தீவிரம் காட்டி வருகிறது. உத்தரபிரதேசத்தில் பா.ஜ.கவுக்கு அடுத்தபடியாக அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியே பிரதான கட்சியாக இருக்கிறது. ஆனால் காங்கிரசும் அவ்வப்போது அதிரடியில் இறங்கி அரசியல் செய்து வருகிறது. சமீபத்தில் உ.பி லக்கிம்பூர் படுகொலை சம்பவத்தை மிக கச்சிதமாக கையில் எடுத்து அனைவரையும் திரும்பி…

மேலும்...