உத்திர பிரதேசத்தில் பசுக்களுக்கான ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்!

Share this News:

லக்னோ (16 நவ 2021): உத்தரபிரதேசத்தில் பசுக்களுக்காக சிறப்பு ஆம்புலன்ஸ் சேவையை அரசு தொடங்கியுள்ளது.

மோசமான நிலையில் உள்ள பசுக்களுக்காக இந்த சேவை தொடங்கப்படும் என்று விலங்குகள் நலன் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமி நாராயண் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் தெரிவிக்கையில், நாட்டின் தற்போதைய திட்டத்தின் ஒரு பகுதியாக 515 ஆம்புலன்ஸ்கள்யஆரம்பத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் டிசம்பரில் அமலுக்கு வரும். அவசரகால இலக்கமான 112க்கு ஆம்புலன்ஸ் சேவையை அழைக்கலாம் என்று அமைச்சர் கூறினார்.

மேலும் அழைப்பு வந்த பதினைந்து நிமிடங்களில், ஆம்புலன்ஸ் குழு, ஒரு கால்நடை மருத்துவர் மற்றும் இரண்டு உதவியாளர்கள் சம்பவ இடத்திற்கு வருவர் என்றார். மேலும் பசுக்களுக்கான குறைகளைத் தீர்க்க தலைநகர் லக்னோவில் கால் சென்டர் அமைக்கப்படும். என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Government launches special ambulance service for cows in Uttar Pradesh


Share this News:

Leave a Reply