ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு!

ECI

புதுடெல்லி (08 ஜன 2022): உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.

அட்டவணைப்படி, இந்த ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை நடைபெறும். ஐந்து மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் முடியும்.

உத்தரபிரதேசத்தில் 403 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

மணிப்பூரின் 60 தொகுதிகளுக்கு பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகவும், கோவா (40 இடங்கள்), பஞ்சாப் (117 இடங்கள்), உத்தரகாண்ட் (70 இடங்கள்) ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி 14 ஆம் தேதியும் தேர்தல் நடைபெறவுள்ளது.

ஐந்து சட்டசபை தேர்தல்களுக்கும் பதிவான வாக்குகள் மார்ச் 10ம் தேதி எண்ணப்படுகிறது.

உத்தரப்பிரதேசம்
கட்டம் 1
(58 சட்டமன்ற தொகுதிகள்)
வாக்கெடுப்பு தேதி – பிப்ரவரி 10

கட்டம் 2
(55 சட்டமன்ற தொகுதிகள்)
தேர்தல் தேதி – பிப்ரவரி 14

கட்டம் 3
(59 சட்டமன்ற தொகுதிகள்)
வாக்குப்பதிவு தேதி – பிப்ரவரி 20

கட்டம் 4
(60 சட்டமன்ற தொகுதிகள்)
வாக்குப்பதிவு தேதி – பிப்ரவரி 23

கட்டம் 5
(60 சட்டமன்ற தொகுதிகள்)
வாக்குப்பதிவு தேதி – பிப்ரவரி 27

கட்டம் 6
(57 சட்டமன்ற தொகுதிகள்)
வாக்குப்பதிவு தேதி – மார்ச் 3

கட்டம் 7
(54 சட்டமன்ற தொகுதிகள்)
வாக்குப்பதிவு தேதி – மார்ச் 7

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply