மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன், ஸ்கூட்டி – உற்சாக அறிவிப்பு!

லக்னோ (21 அக் 2021): உத்திர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் காட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

பா.ஜ.க அரசு மீண்டும் ஆட்சியை தக்க வைக்க தீவிரம் காட்டி வருகிறது. உத்தரபிரதேசத்தில் பா.ஜ.கவுக்கு அடுத்தபடியாக அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியே பிரதான கட்சியாக இருக்கிறது.

ஆனால் காங்கிரசும் அவ்வப்போது அதிரடியில் இறங்கி அரசியல் செய்து வருகிறது. சமீபத்தில் உ.பி லக்கிம்பூர் படுகொலை சம்பவத்தை மிக கச்சிதமாக கையில் எடுத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது காங்கிரஸ்.

கிட்டத்தட்ட உ.பி.யிலேயே முகாமிட்டு இருக்கும் பிரியங்கா காந்தியின் அறிவிப்புகள் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் 40 சதவீத பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார் பிரியங்கா. இதற்கு கட்சிக்குள்ளும், மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் இன்று மாணவர்களுக்காக இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் பிரியங்கா காந்தி. இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ” நான் சில மாணவர்களைச் சந்தித்தேன், படிப்பதற்கும், தங்களை பாதுகாப்பதற்கும் ஸ்மார்ட்போன்கள் தேவை என்று சொன்னார்கள். இடைநிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படும் என்றும் இளங்கலை மாணவர்களுக்கு மின்னணு ஸ்கூட்டி. வழங்கப்படும் என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக் குழுவின் ஒப்புதலுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply