கொரோனா வைரஸுக்கு இந்தியாவில் இரண்டாவது மரணம்!

புதுடெல்லி (13 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் மேலும் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். ஏற்கெனவே, கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு முதியவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்காகத் டெல்லியில் சிகிச்சை பெற்றுவந்த 69 வயதான ஒரு பெண்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது இரண்டாக உயர்ந்துள்ளது. சீனாவில் மட்டுமே பரவி வந்த கரோனா வைரஸ், தற்போது நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் தீவிரமாகப் பரவி…

மேலும்...

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்வு!

புதுடெல்லி (13 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நிலைமை சீரடையும் வரையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 64 பேர் இந்தியர்கள். 16 பேர் இத்தாலி நாட்டை சேர்ந்தவர்கள். ஒருவர் கனடா நாட்டு குடிமகன். இந்த 81 பேருடன் தொடர்பில் இருந்தவர்களையும் மத்திய சுகாதாரத்துறை…

மேலும்...

கொரோனா வைரஸால் இந்தியாவில் முதல் மரணம்!

பெங்களூரு (12 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் முதல் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தைச் சேர்ந்த 76 வயது முதியவர் மொஹம்மது ஹூசைன் சித்திக் சிகிச்சைப் பலனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழந்தார். கர்நாடக மாநிலம் கல்புர்கியைச் சேர்ந்த மொஹம்மது ஹூசைன், ஹைதராபாத்தில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவரது சளி மாதிரி பெங்களூருவில் உள்ள மருத்துவ ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் கொரோனாவால் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தெலங்கானா அரசும் உறுதி செய்துள்ளது….

மேலும்...

இந்தியா உள்ளிட்ட 28 நாடுகளுக்கான பயணத்திற்கு சவூதி அரேபியா தற்காலிக தடை!

ரியாத் (12 மார்ச் 2020): கொரோனா வைரஸ் எதிரொலியாக சவூதி அரேபிய இந்தியா உள்ளிட்ட 28 நாடுகளுக்கான பயணத்திற்கு தற்காலிக தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி வரும் நிலையில், சவூதி அரேபியாவிலும் கொரோனா வைரஸ் 21 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவர் நிவாரணம் பெற்றுள்ளார். இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 28 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள சவூதி அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. ஏற்கனவே உம்ரா, மற்றும் சுற்றுலா விசாவில்…

மேலும்...

அறிகுறிகள் எதுவும் இல்லாமலேயே கொரோனா வைரஸ் இருக்க வாய்ப்பு!

திருவனந்தபுரம் (11 மார்ச் 2020): அறிகுறிகள் எதுவும் இல்லாமலேயே ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்க வாய்ப்பு உள்ளதாக புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லாமல் கொரோனா பாதிக்கப்பட்ட ஐந்து நாட்களுக்குப் பிறகு கொரோனாவுக்கான அறிகுறிகள் தென்பட வாய்ப்பு உள்ளதாகவும், அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதேவேளை 5 முதல் 12 நாட்களுக்கு மேலாக அறிகுறிகள் எதுவும் நீடிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியிலிருந்து கேரளா வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு…

மேலும்...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பு!

புதுடெல்லி (10 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. இதுவரை இந்தியாவில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது டெல்லி, உத்தரப்பிரதேசம், கேரளாவில் எர்ணாகுளம், ஜம்மு, கர்நாடகாவில் பெங்களூரு, பஞ்சாப் மற்றும் புணே ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே சமயம், மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் கரோனா அறிகுறியுடன்…

மேலும்...

இந்தியாவில் கொரோனாவால் 43 பேர் பாதிப்பு!

புதுடெல்லி (09 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனாவிற்கு 43 பேர் பாதிக்கப்படுள்ளனர். கடந்த வருடம் இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகில் 97 நாடுகளில் பரவி விட்டது. 3 ஆயிரத்து 500-க்கு மேற்பட்டோர் பலியாகி விட்டனர். ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தநிலையில், இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...

இந்தியா பேராபத்தில் உள்ளது – மன்மோகன் சிங் பரபரப்பு கட்டுரை!

புதுடெல்லி (06 மார்ச் 2020): இந்தியாவில் நடக்கும் இனப்படுகொலைகள், பொருளாதார மந்தநிலை, மற்றும் உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் உள்ளிட்டவைகளால் இந்தியா பேராபத்தில் உள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இந்து பத்திரிகையில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதாவது: “சமூக ஒற்றுமையின்மை, பொருளாதார மந்தநிலை மற்றும் உலக அளவில் வேகமாக பரவி வரும் தொற்றுநோய் (கொரோனா வைரஸ்) ஆகிய மூன்று பிரச்சனைகளால் இந்தியா உடனடியாக மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொண்டுள்ளது என்று மன்மோகன் சிங் தி…

மேலும்...

இந்தியாவை தொடர்ந்து டார்கெட் செய்யும் கொரோனா – 15 பேருக்கு பாஸிட்டிவ்!

புதுடெல்லி (04 மார்ச் 2020): இத்தாலியிலிருந்து இந்தியா வந்த 15 சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா வைரஸ் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவில் வுகான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் பரவிய இந்த நோய் 60-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. தற்போது ஈரானிலும் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வருகிறது. சீனாவில் பலி எண்ணிக்கை 3000-க்கும் மேலாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் டெல்லி மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த தலா ஒருவருக்கு கொரோனா இருப்பதை மத்திய அரசு உறுதி செய்தது….

மேலும்...

சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை – இம்ரான் கான் எச்சரிக்கை!

இஸ்லாமாபாத் (27 பிப் 2020): பாகிஸ்தானில் வசிக்கும் இஸ்லாமியர் அல்லாத சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் கடும் நட்வடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார். இந்தியாவில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடந்த அமைதி வழி போராட்டத்திற்கு எதிராக இந்துத்வாவினர் வன்முறையில் ஈடுபட்டதால் டெல்லி போர்க்களமாக காட்சி அளிக்கிறது. இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானில் சிறுபான்மையினர் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் ட்விட்டரில் இம்ரான் கான் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “பாகிஸ்தானில் வசிக்கும்…

மேலும்...