இந்தியா உள்ளிட்ட 28 நாடுகளுக்கான பயணத்திற்கு சவூதி அரேபியா தற்காலிக தடை!

Share this News:

ரியாத் (12 மார்ச் 2020): கொரோனா வைரஸ் எதிரொலியாக சவூதி அரேபிய இந்தியா உள்ளிட்ட 28 நாடுகளுக்கான பயணத்திற்கு தற்காலிக தடை விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி வரும் நிலையில், சவூதி அரேபியாவிலும் கொரோனா வைரஸ் 21 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவர் நிவாரணம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 28 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள சவூதி அரசு தற்காலிக தடை விதித்துள்ளது.

ஏற்கனவே உம்ரா, மற்றும் சுற்றுலா விசாவில் வருபவர்களுக்கும் சவூதி அரசு தற்காலிக தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply