அறிகுறிகள் எதுவும் இல்லாமலேயே கொரோனா வைரஸ் இருக்க வாய்ப்பு!

Share this News:

திருவனந்தபுரம் (11 மார்ச் 2020): அறிகுறிகள் எதுவும் இல்லாமலேயே ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்க வாய்ப்பு உள்ளதாக புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லாமல் கொரோனா பாதிக்கப்பட்ட ஐந்து நாட்களுக்குப் பிறகு கொரோனாவுக்கான அறிகுறிகள் தென்பட வாய்ப்பு உள்ளதாகவும், அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதேவேளை 5 முதல் 12 நாட்களுக்கு மேலாக அறிகுறிகள் எதுவும் நீடிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியிலிருந்து கேரளா வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அவர்கள் கேரளாவிற்கு வந்திறங்கியபோது எந்தவித அறிகுறிகளும் அவர்களுக்கு இல்லை என சொல்லப்படுகிறது. அதன் பின்பே அவர்களுக்கு தொண்டை வலி, தும்மல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இதனை அடுத்து அவர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உள்ளது தெரிய வந்தது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்பத்தில் நிமோனியா என்றே அறியப்பட்டது. ஆனால் நோயின் தாக்கம் அதிகரிக்கவே பின்பு அது கொரோனா COVID-19 என்று உறுதி செய்யப்பட்டது.


Share this News:

Leave a Reply