கொரோனா வைரஸுக்கு இந்தியாவில் இரண்டாவது மரணம்!

Share this News:

புதுடெல்லி (13 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் மேலும் ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.

ஏற்கெனவே, கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு முதியவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்காகத் டெல்லியில் சிகிச்சை பெற்றுவந்த 69 வயதான ஒரு பெண்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது இரண்டாக உயர்ந்துள்ளது.

சீனாவில் மட்டுமே பரவி வந்த கரோனா வைரஸ், தற்போது நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்தியாவிலும் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நாடு முழுவதும் இதுவரை 81 பேருக்கு கரோனா வைரஸ் (கொவைட்-19) தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply