முஸ்லிம் மதரஸாவில் நுழைந்து பூஜை நடத்திய இந்துத்துவா கும்பல் -வீடியோ!

பெங்களூரு (07 அக் 2022): கர்நாடக மாநிலம் பிதாரில் தசரா கொண்டாட்டத்தின் போது வரலாற்று சிறப்பு மிக்க மஹ்மூத் கவான் மதரஸா வளாகத்திற்குள் புகுந்த இந்துத்துவா கும்பல் பூஜை நடத்தியுள்ளது. 1460 களில் கட்டப்பட்ட இந்த மதரஸா இந்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களின் பட்டியலில் மதரஸாவும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதன்கிழமை மாலை இந்த மதரஸாவில் நுழைந்த கும்பல் இந்த அட்டூழியத்தை நிகழ்த்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோவும் வைரலாகி வருகிறது. இச்சம்பவத்தில்…

மேலும்...

முஸ்லிம் பெண்களை வன்புணர்வு செய்வேன் – இந்துத்துவ சாமியார் மிரட்டல் – வீடியோ

லக்னோ (08 ஏப் 2022): உத்திர பிரதேசத்தில் காவி உடையணிந்த சாமியார் ஒருவர் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு மற்றும் முஸ்லீம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையைத் தூண்டும் வகையில் மிரட்டல் விடுத்துள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி நவராத்திரி விழாவையொட்டி உத்திர பிரதேசம் கைராபாத் நகரத்தில் உள்ள மகரிஷி ஸ்ரீ லக்ஷ்மண் தாஸ் உதாசின் ஆசிரமத்தின் சாமியார் பஜ்ரங் முனி தாஸ் தலைமையில் ஊர்வலம் ஒன்று சென்றுள்ளது….

மேலும்...

முஸ்லிம் பழ வியாபாரிகளை புறக்கணிக்க இந்துக்களுக்கு இந்துத்துவாவினர் அழைப்பு!

பெங்களூரு (06 ஏப் 2022): கர்நாடகாவில் முஸ்லிம் பழ வியாபாரிகளை புறக்கணிக்க வேண்டும் என்று இந்துக்களுக்கு இந்துத்துவாவினர் அழைப்பு விடுத்துள்ளனர். கர்நாடகாவில் இந்துத்துவாவினரின் அடாவடி எல்லை மீறி சென்றுகொண்டுள்ளது. ஹிஜாப்களுக்கு எதிரான பிரச்சாரங்கள், கோவில் கண்காட்சிகளில் முஸ்லிம் வியாபாரிகள் புறக்கணிப்பு, ஹலால் இறைச்சி, மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துதலுக்கு எதிர்ப்பு என கூக்குரல் இட்டு வரும் இந்துத்துவாவினர், இப்போது முஸ்லிம் பழ வியாபாரிகளைக் குறிவைத்து, மொத்த பழச் சந்தையில் இந்துக்கள் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று கோரியுள்ளது. கர்நாடகாவில்…

மேலும்...

பொது இடங்களில் தொழுகை நடத்துவதற்கு இந்துத்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு!

குருகிராம் (28 மார்ச் 2022): அரியானா மாநிலம் குருகிராமில் பொது இடங்களில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த இந்துத்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து சன்யுக்த் ஹிந்து சங்கர்ஷ் சமிதி என்ற இந்துத்துவ அமைப்பு குருகிராமில் உள்ள மில்லினியம் சிட்டி முழுவதும் பொது இடங்களில் தொழுகை நடத்துவதை உடனடியாகத் தடை செய்யாவிட்டால், மாநிலம் முழுவதும் மாபெரும் போராட்டத்தை நடத்தப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. அதன் தலைவர் மகாவீர் பரத்வாஜ் தலைமையிலான 5 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு,…

மேலும்...

காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் இந்துத்துவாவின் சமீபத்திய முஸ்லிம் எதிர்ப்பு ஆயுதம்!

காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற திரைப்படம், இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான மற்றும் காஷ்மீர் எதிர்ப்பு உணர்வுகளைத் தூண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு பிரச்சார கருவியாக மாறியுள்ளது, இது சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பின் தற்போதைய சூழலைக் காட்டியுள்ளது. காஷ்மீர் ஃபைல்ஸ் 1990-ல் கொல்லப்பட்டு உயிரிழந்த காஷ்மீரி பண்டிட்களின் நிலை குறித்து பேசுகிறது. வலதுசாரியாக அறியப்பட்ட விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய இந்தத் திரைப்படம் மார்ச் 11ஆம் தேதி வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. இத்திரைப்படம் மூலம் வலதுசாரி ஆதரவாளர்களிடமிருந்து மிகத் தெளிவான எதிர்வினைகள் இணையத்தில்…

மேலும்...

இந்துத்துவாவினரால் எரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தா – உ.பியில் பரபரப்பு!

லக்னோ (26 டிச 2021): நேற்று நாடெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஆனால் லக்னோவில் கிறிஸ்தவர்களை எதிர்த்து சர்வதேச இந்து பரிஷத் மற்றும் ராஷ்ட்ரீய பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது ஆக்ரா மகாத்மா காந்தி மார்க் செயின்ட் ஜான்ஸ் கல்லூரிக்கு அருகில் கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மைக்கு இந்துத்துவா அமைப்பினர் தீ வைத்தனர். அப்போது பேசிய ராஷ்ட்ரிய பஜ்ரங் தளத்தின் தலைவர் அஜு சவுகான், “கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா மூலம்…

மேலும்...

முஸ்லிம்களை படுகொலை செய்யுங்கள் – அதிர்ச்சி அடைய செய்யும் இந்துத்வா அமைப்பினரின் மாநாடு!

புதுடெல்லி (25 டிச 2021): முஸ்லிம்களை படுகொலைச் செய்ய வேண்டும் என்று உத்தர்காண்டில் நடைபெற்ற இந்துத்துவா மாநாட்டில் பிரகடனம் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர்காண்ட் மாநிலம் ஹரித்வாரில் பல்வேறு இந்துத்துவா அமைப்புகள் இணைந்து நடத்திய ‘தர்ம சன்சத்’ என்ற பெயரில் இந்துத்துவ மாநாடு நடந்தேறியுள்ளது. அதில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளும் முஸ்லிம்களை கொலை செய்ய வேண்டும் என்பதாகவும் பிரகடனப்படுத்தப்பட்டள்ளது. இந்த மாநாடு டிசம்பர் 17 முதல் 19 வரை நடைபெற்றது. விழாவில் பேசிய தலைவர்கள்…

மேலும்...

இந்துத்வாவும் ஐஎஸ் அமைப்பும் ஒன்றே – காங்கிரஸ் மூத்த தலைவர் புத்தகத்தில் கருத்து!

புதுடெல்லி (11 நவ 2021): காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷீத் தான் எழுதிய புத்தகத்தில் ஹிந்துத்வாவையும், ஐஎஸ் அமைப்பையும் ஒப்பிட்டு எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான குர்ஷீத், ‘சன்ரைஸ் ஓவர் அயோத்யா’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இதில், இந்துத்வா குறித்து விமர்சித்து அவர், சனாதன தர்மம் எனப்படும் ஹிந்து மதம், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் முனிவர்களாலும், துறவிகளாலும் ஏற்படுத்தப் பட்டது. ஆனால், அதன் புனிதத்தை ஹிந்துத்வா கொள்கைகள்…

மேலும்...

முஸ்லிம்களுக்கு எதிராக விஷம கோஷங்களை எழுப்பிய இந்துத்வாவினர் கைது!

லக்னோ (15 ஜன 2020): உத்திர பிரதேசத்தில் இந்துத்வாவினர் நடத்திய பேரணியில் முஸ்லிம்களுக்கு எதிராக கோஷமிட்டவர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் ஷிகார்பூர் நகரில் ராமர் கோவில் கட்ட நிதி திரட்டுவதற்காக நடைபெற்ற பேரணியில் முஸ்லிம்களுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அதில் குறிப்பிட்ட இருவர் முஸ்லிம்களுக்கு எதிராக விஷமத்தனமான கோஷங்களை எழுப்பியுள்ளனர். “இந்துஸ்தான் இந்துக்களுக்கு சொந்தம்…, முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள்” என்கிற வகையில் இந்த கோஷங்கள் இருந்துள்ளன. அந்த வீடியோ கிளிப் சமூக…

மேலும்...

இந்துத்வா அமைப்பினர் கைது!

எர்ணாகுளம் (27 மே 2020): தேவாலயம் செட்டை உடைத்தெறிந்தது தொடர்பாக இந்துத்வா அமைப்பினர் இருவரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர். பிரபல மலையாள இளம் நடிகர் டோவினோ தாமஸ். இவர் ‘மின்னல் முரளி’ என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். ஸ்னேகா பாபு, அஜு வர்க்கீஸ், ஹரிஸ்ரீ அசோகன், பைஜூ சந்தோஷ் உட்பட முன்னணி நடிகர்கள் நடிக்கும் இந்த படத்தை, பிரபல இயக்குநர் பேசில் ஜோசப் இயக்கி வருகிறார். இந்த படத்துக்காக எர்ணாகுளம் அருகே காலடி மகாதேவர்…

மேலும்...