முஸ்லிம் பெண்களை வன்புணர்வு செய்வேன் – இந்துத்துவ சாமியார் மிரட்டல் – வீடியோ

Share this News:

லக்னோ (08 ஏப் 2022): உத்திர பிரதேசத்தில் காவி உடையணிந்த சாமியார் ஒருவர் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு மற்றும் முஸ்லீம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையைத் தூண்டும் வகையில் மிரட்டல் விடுத்துள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி நவராத்திரி விழாவையொட்டி உத்திர பிரதேசம் கைராபாத் நகரத்தில் உள்ள மகரிஷி ஸ்ரீ லக்ஷ்மண் தாஸ் உதாசின் ஆசிரமத்தின் சாமியார் பஜ்ரங் முனி தாஸ் தலைமையில் ஊர்வலம் ஒன்று சென்றுள்ளது.

அந்த ஊர்வலம் ஷேஷே வாலி மசூதி அருகே சென்றடைந்தபோது, ​​”ஜெய் ஸ்ரீ ராம்” என்று கூச்சலிட்டு கைதட்டி அவரை ஊர்வலத்தினர் உற்சாகப்படுத்தியுள்ளனர். அப்போது அந்த சாமியார் வெறுக்கத்தக்க உரையை நிகழ்த்தியுள்ளார்.

அப்போது அவர் பேசுகையில், எந்த ஒரு இந்து பெண்ணையும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவன் கிண்டல் செய்வதாக தெரிந்தால் நான் முஸ்லிம் பெண்களை கடத்தி பொது இடத்தில் வன்புணர்வு செய்வேன் என்று அந்த வீடியோவில் பேசுகிறார்.

41 வினாடிகள் கொண்ட வீடியோவின் பின்னணியில் காவல்துறை சீருடையில் ஒருவர் இருப்பதையும் பார்க்கலாம்.

ஒரு பத்திரிகையாளர் இந்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டு உத்தரபிரதேச காவல்துறையை டேக் செய்த பிறகு, வடக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜீவ் தீட்சித்தின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

விசாரணையில் வெளிவரும் உண்மைகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் விதிகளின்படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Share this News:

Leave a Reply