இந்துத்வாவும் ஐஎஸ் அமைப்பும் ஒன்றே – காங்கிரஸ் மூத்த தலைவர் புத்தகத்தில் கருத்து!

புதுடெல்லி (11 நவ 2021): காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷீத் தான் எழுதிய புத்தகத்தில் ஹிந்துத்வாவையும், ஐஎஸ் அமைப்பையும் ஒப்பிட்டு எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான குர்ஷீத், ‘சன்ரைஸ் ஓவர் அயோத்யா’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

இதில், இந்துத்வா குறித்து விமர்சித்து அவர், சனாதன தர்மம் எனப்படும் ஹிந்து மதம், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் முனிவர்களாலும், துறவிகளாலும் ஏற்படுத்தப் பட்டது. ஆனால், அதன் புனிதத்தை ஹிந்துத்வா கொள்கைகள் சீரழித்துவிட்டன.

இந்துத்வாவின் அரசியல் பதிப்பும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் கொள்கைகளும் ஒன்றே தான்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதனிடையே இந்த கருத்துக்கு எதிராக, சல்மான் குர்ஷீத் மீது, வழக்கறிஞர்கள் வினீத் ஜிண்டால், விவேக் கார்க் ஆகியோர் தனித்தனியே புகார் செய்துள்ளனர்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply