முஸ்லிம்களுக்கு எதிராக விஷம கோஷங்களை எழுப்பிய இந்துத்வாவினர் கைது!

லக்னோ (15 ஜன 2020): உத்திர பிரதேசத்தில் இந்துத்வாவினர் நடத்திய பேரணியில் முஸ்லிம்களுக்கு எதிராக கோஷமிட்டவர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் ஷிகார்பூர் நகரில் ராமர் கோவில் கட்ட நிதி திரட்டுவதற்காக நடைபெற்ற பேரணியில் முஸ்லிம்களுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அதில் குறிப்பிட்ட இருவர் முஸ்லிம்களுக்கு எதிராக விஷமத்தனமான கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

“இந்துஸ்தான் இந்துக்களுக்கு சொந்தம்…, முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள்” என்கிற வகையில் இந்த கோஷங்கள் இருந்துள்ளன. அந்த வீடியோ கிளிப் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதை அடுத்து எழுந்த புகாரின் அடிப்படையில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். வீடியோ கிளிப் பதிவு செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டதை குற்றவாளிகள் ஒப்புக்கொண்டனர்.

ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் இதுபோன்ற பேரணிகளில் பல வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது,

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply