தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டவாரியாக விவரம்!

Share this News:

சென்னை (03 மே 2020): தமிழகத்தில் இதுவரை 2757 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரம்:

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 256 ஆக உயர்ந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் 142 பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 90 பேருக்கும், மதுரை மாவட்டத்தில் 88 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 81 பேருக்கும், ஈரோடு மாவட்டத்தில் 70 பேருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 68 பேருக்கும், திருநெல்வேலியில் 63 பேருக்கும், நாமக்கல்லில் 61 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் 57 பேருக்கும், வி‍ழுப்புரம் மாவட்டத்தில் 53 பேருக்கும், திருச்சி மாவட்டத்தில் 51 பேருக்கும் கொரோனா உறுதி ‍செய்யப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் 45 பேருக்கும், தேனி மாவட்டத்தில் 44 பேருக்கும், கரூர் மாவட்டத்தில் 43 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 41 பேருக்கும், ராணிப்பேட்டையில் 40 பேருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது.

தென்காசியில் 38 பேருக்கும், சேலத்தில் 33 பேருக்கும், விருதுநகர் மாவட்டத்தில் 32 பேருக்கும், கடலூர் மாவட்டத்தில் 30 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவாரூரில் 29 பேருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 27 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 26 பேருக்கும் கொரோனா தொற்று உள்ளது.

வேலூரில் 22 பேருக்கும், ராமநாதபுரத்தில் 20 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 18 பேருக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 16 பேருக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 15 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் 12 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் 11 பேருக்கும், நீலகிரி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தலா 9 பேருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது. தருமபுரி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உள்ளது.


Share this News: