குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா – அதிரும் காஞ்சிபுரம்!

காஞ்சிபுரம் (22 ஜூன் 2021): காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 29ம் தேதி முதல் 19ம் தேதி வரைக்கும் ஒரு வயது முதல் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 258 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதா. அம்மாவட்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். கொரோனா முதல் அலையில் 50 வயதுக்கும் மேல் உள்ளவர்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். இரண்டாம் அலையில் 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்களுக்கு அதிகம் பாதிப்பு இருந்து வந்தது. ஆனால் தற்போது ஒரு…

மேலும்...

இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசி பெற்றவர்கள் ஐக்கிய அரபு அமீரகம் வர அனுமதி!

துபாய் (21 ஜூன் 2021): இந்தியாவில் கோவிஷீல்ட் இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றவர்கள் ஐக்கிய அரபு அமீரகம் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவலை அடுத்து அங்கிருந்து இந்தியர்களுக்கு பயணம் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் ஜூன் 23 ஆம்தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவிற்கான பயணத்தடையை நீக்குகிறது. அதேவேளை ஐக்கிய அரபு அமீரகம் அங்கிகரித்துள்ள தடுப்பூசி இரண்டு டோஸ் பெற்றிருக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி துபாயில்…

மேலும்...

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் என்னென்ன தளர்வுகள் – முழு விவரம்!

சென்னை (20 ஜூன் 2021): இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஜூன் 28ஆம் தேதி வரை, மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 27 மாவட்டங்களில் அனைத்து வகை கடைகள் மாலை 7 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் 50 சதவீத நபர்களுடன் பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்கள் 50 சதவீதம் பயணிகளுடன் இயங்க அனுமதி…

மேலும்...

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் – இன்று மாலை அறிவிப்பு வெளியாகிறது!

சென்னை (19 ஜூன் 2021): தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்படலாம் என்று தெரிகிறது. கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு, கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்த தமிழக அரசின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. மருத்துவ வல்லுனர்கள், சுகாதாரத்துறை, அரசுத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்த அறிவிப்பை இன்று மாலை வெளியிடுவார் என்று தெரிகிறது. கட்டுப்பாடுகளுடன் நகைக்கடை, துணிக்கடை மற்றும் பேருந்து சேவையை உள்ளிட்டவற்றுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனா குறையாத…

மேலும்...

இந்தியாவில் அடுத்த 6 முதல் 8 வாரங்களில் கோவிட் 19 மூன்றாவது அலை!

புதுடெல்லி (19 ஜூன் 2021): கோவிட் 19, 3வது அலை அடுத்த 6 முதல் 8 வாரங்களில் அது துவங்க வாய்ப்பு உள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கோவிட் 19 இரண்டாவது அலை பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில் 3வது அலை தவிர்க்க முடியாதது என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், கோவிட் பரவலில் கடந்த முதல்…

மேலும்...

சவூதியில் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் பெற ஜூலை மாதம் முதல் பதிவு செய்யலாம்!

ரியாத் (18 ஜுன் 2021): கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோசுக்கான முன்பதிவு அடுத்த மாதம் முதல் தொடங்கப்படும் என்று சவூதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகத்தில் உலகளாவிய பற்றாக்குறை காரணமாக இரண்டாவது டோஸ் நியமனங்களை ஒத்திவைப்பதாக சவூதி சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்தது. மேலும் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு, குறிப்பாக அதிக ஆபத்துள்ள மக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் அளவை வழங்குவதற்காகவும் இரண்டாவது டோஸ் முன்பதிவு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே தற்போது…

மேலும்...

முழுமையாக தடுப்பூசி பெற்ற வெளிநாட்டவர்கள் ஆகஸ்ட் 1முதல் குவைத் வர அனுமதி!

குவைத் (18 ஜுன் 2021): முழுமையாக தடுப்பூசி பெற்ற வெளிநாட்டவர்கள் ஆகஸ்ட் முதல் குவைத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குவைத் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி பெற்றவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.. மெடோனா அஸ்ட்ரா சேனகா மற்றும் ஃபைசர் உள்ளிட்ட தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களையும், ஜான்சன் & ஜான்சன் ஒரு டோஸையும் பூர்த்தி செய்தவர்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் அனுமதி வழங்கப்படும் குவைத் வருவதற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் நெகட்டிவ்…

மேலும்...

துபாயில் கொரோனாவுக்கு தாயை பறிகொடுத்து தனியே தமிழ்நாடு வந்த கைக்குழந்தை!

திருச்சி (18 ஜுன் 2021): துபாயில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தாய் உயிரிழந்த நிலையில், அவருடன் வசித்த குழந்தை நேற்று திருச்சி வந்தடைந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சித்தேரி தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் வேலன் (38) – பாரதி (38) தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. அதன்பிறகு மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர். இதில், முதல் குழந்தை நுரையீரல் கோளாறு காரணமாக ஏற்கனவே இறந்துவிட்டது. குடும்ப வறுமை காரணமாக தவித்துவந்த நிலையில், கடந்த மார்ச்…

மேலும்...

இதைத்தான் எதிர் பார்த்தோம் – திமுக அரசை கொண்டாடும் மக்கள்!

சென்னை (18 ஜுன் 2021): கொரொனா தொற்று குறையாத 11 மாவட்டங்களில் இலவச உணவு திட்டம் தொடரும் என்று தமிழ்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இப்போதுகூட கொரோனா தொற்று அதிகமாகிவிட்ட நிலையில், யார் கையிலும் காசு இல்லாத நிலையில், இந்த உணவு திட்டம் பேருதவியாகி கொண்டிருக்கிறது.. அதற்கான முன்னெடுப்பை திமுக அரசு கையில் எடுத்துள்ளது.. ஏற்கனவே ரேஷன் அட்டைகளுக்கு 4000 ரூபாய், மளிகை பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல, மற்றொருபக்கம் அறநிலைய துறை சார்பாகவும், கோயில்கள் மூலம் உணவு…

மேலும்...

சவூதி அரேபியா கோவிட் வரைமுறைப்படி வெளிநாட்டு பயணிகள் – முகீம் பதிவும் நடைமுறையும்!

ரியாத் (18 ஜுன் 2021): சவூதி அரேபியாவுக்கு வரும் அனைத்து வெளிநாட்டினரும் முகீம் போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனை நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. கோவிட் 19 நடைமுறைகளின் ஒரு பகுதியாக சவூதி அரேபியாவிலும் வெளிநாட்டிலும் தடுப்பூசி போடப்பட்ட அல்லது போடாதவர்கள் சவூதி அரேபியாவுக்கு வரும்போது முகீம் பதிவு கட்டாயமாகும். சவூதி அரேபியாவுக்கு புறப்பட்ட 72 மணி நேரத்திற்குள் பதிவு முடிக்கப்பட வேண்டும். விமான நிலையங்கள் மற்றும் பிற எல்லை நுழைவுகளில் நெரிசலைக் குறைக்கவும்…

மேலும்...